காவல் துறை காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்ப தவாக வலியுறுத்தல்

தவாக தலை​வர் வேல்முருகன் | கோப்புப் படம்

தவாக தலை​வர் வேல்முருகன் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்முருகன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: “காவல் துறை​யில் சுமார் 15 ஆயிரம் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. காவல்துறையில் அனு​ம​திக்​கப்​பட்ட 1.35 லட்​சம் பணி​யிடங்​களில், 1.19 லட்​சம் பேர் மட்​டுமே தற்போது பணி​யில் உள்​ளனர். மறுபுறம், தேர்​வு​களை முடித்துவிட்டு பணி நியமன ஆணைக்​காக ஆயிரக்​கணக்​கான தகு​தி​யான இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர்.

தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் அறிவிக்கப்​பட்ட 2,833 இரண்​டாம் நிலைக் காவலர்​கள், 180 சிறைக் காவலர்​கள், 631 தீயணைப்​பாளர்​கள் என மொத்​தம் 3,644 பணி​யிடங்​களுக்​கான எழுத்​துத் தேர்​வு, உடற்​தகு​தித் தேர்​வு​கள் முடிந்​து​விட்​டன.

ஆனால், உயரம் அளவீடு தொடர்​பான வழக்​கு​கள் மற்​றும் தமிழ்வழிக் கல்வி இடஒதுக்​கீடு வழக்​கு​களைக் காரணம் காட்​டி, உதவி ஆய்​வாளர் உள்​ளிட்ட அடுத்​தகட்ட பணி நியமனங்​கள் கால​வரை​யின்றி முடங்​கி​யுள்​ளன. எனவே, சட்​டச் சிக்​கல்​களுக்கு விரைந்து தீர்வு கண்​டு, தகு​திபெற்ற இளைஞர்​களுக்கு தாமதமின்றிப் பணி நியமன ஆணையை வழங்க வேண்​டும். வழக்​கு​களை விரைந்து முடித்​து, காலிப் பணி​யிடங்​களை உடனடியாக நிரப்ப வேண்​டும்​.

<div class="paragraphs"><p>தவாக தலை​வர் வேல்முருகன் | கோப்புப் படம்</p></div>
“காங்கிரஸில் இருந்தே ராகுல் காந்தியை வெளியேற்றும் காலம் வரும்” - பொன்​.​ராதாகிருஷ்ணன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in