“காங்கிரஸில் இருந்தே ராகுல் காந்தியை வெளியேற்றும் காலம் வரும்” - பொன்​.​ராதாகிருஷ்ணன் விமர்சனம்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருகைதந்த தமிழக பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ்வை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். உடன், பொன். ராதாகிருஷ்ணன் | படம்: எல்.சீனிவாசன்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருகைதந்த தமிழக பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ்வை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். உடன், பொன். ராதாகிருஷ்ணன் | படம்: எல்.சீனிவாசன்

Updated on: 
1 min read

சென்னை: ‘இந்​தி​யாவை வங்​கதேசம், நேபாளம் போன்று மாற்ற வேண்​டும் என்​பது​தான் ராகுல் காந்​தி​யின் நோக்​கம். அவரை காங்​கிரஸில் இருந்து அவரது கட்​சி​யினரே வெளி​யேற்​றும் காலம் வரும்’ என பாஜக மூத்த தலை​வர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன் விமர்​சித்​துள்​ளார்.

தமிழக பாஜக​வுக்கு புதிய மேலிடப் பொறுப்​பாள​ராக ராம் மாதவ், மேலிட இணை பொறுப்​பாளர்​கள் நிர்​மல் குமார் சுரா​னா, டி.கே.அருணா ஆகி​யோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், சென்​னை, தி.நகரில் உள்ள மாநிலத் தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​துக்கு நேற்று அவர்​கள் வருகை தந்​தனர். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மூத்ததலை​வர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஆந்​திர மாநில பாஜக​வின்மேலிட இணை பொறுப்​பாளர் வானதி சீனி​வாசன், முன்​னாள் ஆளுநர் தமி​ழிசை சவுந்​திர​ராஜன் உள்​ளிட்​டோர் புதிய நிர்​வாகி​களை வரவேற்​ற​னர்.

அதைத்​தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் பொன்​.​ரா​தாகிருஷ்ணன் கூறிய​தாவது: தமிழகத்துக்கான புதிய மேலிடப்பொறுப்பாளரான ராம் மாதவ், எந்த மாநிலத்​தில் எல்​லாம் பொறுப்பு வகித்​தா​ரோ, அங்​கெல்​லாம் பாஜகவை ஆட்​சி​யில் அமர்த்​தி​னார். ‘தமி​ழ​கத்​தில் பாஜகவை வலுப்​படுத்த வேண்​டும். நமது பலத்தை நிரூபிக்க வேண்​டும்’ என்று ராம் மாதவ் கூறி​யுள்​ளார். தமி​ழ​கத்​தில் உள்ள அனைத்து மாவட்​டங்​களின் தலைமை இடத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் 25 ஆண்​டு​ கால சாதனையைப் போற்​றும் வகை​யில் ‘சேவை ஜோதி பேரணி’அக்​.7-ல் (நாளை) நடைபெறுகிறது.

மேலும், அக்​.11-ம் தேதி தமி​ழ​கத்​துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்​தி​யாவை வங்​கதேசம், நேபாளம் போன்று மாற்ற வேண்​டும் என்​பது​தான் ராகுல் காந்​தி​யின்நோக்​கம். ராகுல் காந்​தியை காங்​கிரஸில்​ இருந்​து அக்​கட்​சி​யினரே வெளி​யேற்​றும்​ ​காலம்​ வரும்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.

<div class="paragraphs"><p>சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருகைதந்த தமிழக பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ்வை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். உடன், பொன். ராதாகிருஷ்ணன் | படம்: எல்.சீனிவாசன்</p></div>
புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு: கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in