வேளச்சேரி - பரங்கிமலை மின்சார ரயில்​ சேவைக்கு அமோக வரவேற்பு: ​தினமும் 28,000+ பேர் பயணம்

வேளச்சேரி - பரங்கிமலை மின்சார ரயில்​ சேவைக்கு அமோக வரவேற்பு: ​தினமும் 28,000+ பேர் பயணம்
Updated on
1 min read

சென்​னை: வேளச்சேரி - பரங்​கிமலை இடையே பறக்​கும்​ மின்​சா​ர ர​யில்​ சேவை தொடங்​கி 42 ​நாட்​களை கடந்​த நிலை​யில்​, நல்​ல வர​வேற்​பு கிடைத்​துள்​ளது. தற்​போது ​நாள்​தோறும்​ 28 ஆ​யிரத்​துக்​கும்​ மேற்​பட்​டோர்​ பயணி​க்​கின்​றனர்​.

இத்​தடத்​தில்​ உள்​ள புழு​தி​வாக்​கம்​ நிலை​யத்​தில்​ மின்​தூக்​கி, நகரு​ம்​ படிக்​கட்​டு ​போன்​ற வச​தி​களை ஏற்​படு​த்​த வேண்​டும்​ என பயணி​கள்​ கோரி​க்​கை ​விடு​த்​துள்​ளனர்​.

சென்​னை​யின்​ பொது ​போக்​கு​வரத்​தில்​ ​முக்​கியப்​ பங்​கு வகி​க்​கிறது புறநகர்​ மின்​சா​ர ர​யில்​ சேவை. சென்​ட்​ரல்​, கடற்​கரை நிலை​யங்​களில்​ இருந்​து பல்​வேறு இடங்​களுக்​கு மின்​சா​ர ர​யில்​கள்​ இயக்​கப்​படு​கின்​றன.

இ​தில்​ கடற்​கரை - வேளச்​சேரி இடையே இயக்​கப்​படும்​ பறக்​கும்​ ர​யில்​ வழித்​தடத்​தில்​ ​தினசரி ஒரு லட்​சத்​துக்​கும்​ மேற்​பட்​டோர்​ பயணி​க்​கின்​றனர்​.

இதற்​கிடையே, சென்​னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும்​ ர​யில்​ தடத்​தின்​ ​விரி​வாக்​க​மாக, வேளச்​சேரி - பரங்​கிமலை ​திட்​டப்​பணி​கள்​ தொடங்​கப்​பட்​டு 17 ஆண்​டு​களுக்​குப்​ பிறகு, கடந்​த ​மார்​ச்​ 14-ம்​ தே​தி ர​யில்​ சேவை தொடங்​கியது.

இந்​த வழித்​தடம்​ மடிப்​பாக்​கம்​, கீழ்​க்​கட்​டளை, புழு​தி​வாக்​கம்​, ஆதம்​பாக்​கம்​, வேளச்​சேரி உட்​பட சுற்​று​வட்​டாரப்​ பகு​தி​களைச்​ சேர்​ந்​த மக்​களுக்​கு பேருத​வி​யாக உள்​ளது. இத்​தடத்​தில்​ ஆரம்​ப​த்​தில்​ ​தினசரி 15 ஆ​யிரம்​ ​முதல்​ 20 ஆ​யிரம்​ பேர்​ பயணித்​தனர்​.

இது படிப்​படி​யாக அ​தி​கரித்​து, தற்​போது ​தினசரி 28 ஆ​யிரத்​துக்​கும்​ மேற்​பட்​டோர்​ பயணி​க்​கின்​றனர்​. பரங்​கிமலை ர​யில்​ நிலை​யம்​ ஒரு ​முக்​கிய ​போக்​கு​வரத்​து மைய​மாகத்​ ​தி​கழ்​வ​தால்​ பயணி​களின்​ எண்​ணி​க்​கை தொடர்​ந்​து அ​தி​கரித்​து வரு​கிறது.

இந்​த நிலை​யத்​தில்​ இருந்​து புறநகர்​ மின்​சா​ர ர​யில்​கள்​, மெட்​ரோ ர​யில்​கள்​ மூல​மாக சென்​னை நகரின்​ பல்​வேறு இடங்​களுக்​கு எளி​தில்​செல்​ல ​முடி​யும்​. இந்​த ஆண்டு இறு​தி​க்​குள்​ இத்​தடத்​தில்​ ​தினசரி பயணிப் போர்​ எண்​ணி​க்கை 30 ஆ​யிரத்​தை கடந்​து​விடும்​ என எ​திர்​பார்​க்​கப்​படு​கிறது.

ஆதம்பாக்கம் நிலையம் அதே​நேரம்​, ஆதம்​பாக்​கம்​ ர​யில்​ நிலை​யத்​தை ​விரை​வில்​ ​திறக்​க வேண்​டும்​ என்​றும்​, புழு​தி​வாக்​கம்​ ர​யில்​ நிலை​யத்​தில்​ அடிப்​படை வச​தி​களை ஏற்​படு​த்​த வேண்​டும்​ என்​றும்​ பயணி​கள்​ கோரி​க்​கை ​விடு​த்​துள்​ளனர்​.

இதுகுறித்​து, புழு​தி​வாக்​கத்​தைச்​ சேர்​ந்​த ஜி.சிவக்​கு​மார்​ கூறும்​போது, ‘‘பரங்​கிமலை - வேளச்​சேரி தடத்​தில்​ உள்​ள புழு​தி​ வாக்​கம்​ நிலை​யம்​ தற்​போது பரபரப்​பாக ​காணப்​படு​கிறது. ஆ​னால், இந்​த நிலை​யத்​தில்​ பயணி​களுக்​கான அடிப்​படை வச​தி​கள்​ ​போது​மான​தாக இல்​லை.

மின்​தூக்​கி​கள்​, நகரு​ம்​ படிக்​கட்​டு வச​தி​களை ஏற்​படு​த்​தி, ​முறை​யாகப்​ ப​ராமரி​க்​க வேண்​டும்​. ர​யில்​ நிலை​யம்​, தூய்​மை​யாக​​வும்​, சு​கா​தா​ர​மாக​​வும்​ பேணப்​பட வேண்​டும்​. அதே​போல்​, ஆதம்​பாக்​கம்​ ர​யில்​ நிலை​யத்​தை ​விரை​வில்​ மக்​கள்​ பயன்​பாட்​டு​க்​கு ​கொண்​டு​வர வேண்​டும்’’ என்​றார்​.

இதுகுறித்​து, சென்​னை ர​யில்​வே கோட்​ட அ​தி​காரி​கள்​ கூறும்​போது, “புழு​தி​வாக்​கம்​ நிலை​யத்​தில்​ மின்​தூக்​கி, நகரு​ம்​ படிக்​கட்​டு ​போன்​ற வச​தி​களை ஏற்​படு​த்​து​ம்​ பணி செயல்​பாட்​டில்​ உள்​ளது. ஆதம்​பாக்​கம்​ ர​யில்​ நிலை​யம்​ மக்​கள்​ பயன்​பாட்​டு​க்​கு ​விரை​வில்​ ​திறக்​கப்​படும்'' என்​றனர்​.

வேளச்சேரி - பரங்கிமலை மின்சார ரயில்​ சேவைக்கு அமோக வரவேற்பு: ​தினமும் 28,000+ பேர் பயணம்
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவையில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in