புதுச்சேரியில் 4 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டி

விசிக தலைவர் திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் திமுக​வுக்கு 14 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. இதில் இருந்​து, உழவர்​கரை தொகு​தியை விடு​தலைச்சிறுத்​தைகள் கட்​சிக்கு திமுக ஒதுக்​கியது. இந்​நிலை​யில், இந்த தொகு​தி​யில் சுயேச்சை எம்​எல்ஏ சிவசங்​கரை காங்​கிரஸ் தனது வேட்​பாள​ராக நிறுத்​தி​யுள்​ளது. கடந்த 5 ஆண்​டு​களாக பாஜக​வின் ஆதரவு எம்​எல்​ஏ​வாக செயல்​பட்ட இவர், கடந்த 10 நாட்​களுக்கு முன் காங்​கிரஸில் சேர்ந்​தார்.

இதற்கு விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி அதிருப்தி தெரிவித்​துள்​ளது. அத்​துடன் 4 தொகு​தி​களில் தனி​யாக போட்​டி​யிட இருப்​ப​தாக அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “விசிக​வுக்​கென உழவர்​கரை தொகுதி ஒதுக்​கப்​பட்ட பிறகும் கூட தனது கட்சி வேட்​பாளரை புதுவை காங்​கிரஸ் வாபஸ் வாங்க மறுக்​கிறது.

எனவே, விசிக வேட்​புமனு தாக்​கல் செய்​திருந்த ஊசுடு தொகு​திக்​கான வேட்​பாளர் அரியபுத்ரி என்​கிற அரி​மாத்​ தமிழன், நெட்​டப்​பாக்​கம் தொகு​திக்கு அமுதவன், உழவர்​கரைக்கு செல்வ புஷ்பலதா ஆகியோரை வேட்​பாளர்​களாக அறிவிக்​கிறோம்​” என்​று தெரி​வித்​துள்​ளார்​. விடுதலை சிறுத்தை கட்சியின் ஏனாம் தொகுதி செயலாளர் மெல்லம் சீனிவாச ராவ் விசிக சார்பாக 4-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.

<div class="paragraphs"><p>விசிக தலைவர் திருமாவளவன்</p></div>
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in