மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி

தேர்தல் ஆணையத்தை நாட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
ராமதாஸ்

ராமதாஸ்

Updated on
2 min read

சென்னை: தேர்​தல் முடி​யும்​வரை மாம்​பழ சின்​னத்தை முடக்கி வைக்​கக் கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ் தாக்​கல் செய்த 2 இடைக்​கால மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்​துள்ள சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்தை நாட உத்​தர​விட்​டுள்​ளது.

பாமக​வின் மாம்​பழ சின்​னம் உள்​ளிட்ட உள்​கட்சி பிரச்​சினை தொடர்​பான ராம​தாஸ் தரப்பு வழக்கை 3 நாட்​களில் விசா​ரித்து முடிக்க வேண்​டுமென சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டிருந்​தது. அதன்​படி, பாமக​வின் தலை​வ​ராக தன்னை அங்​கீகரிக்க வேண்​டும். பாமக​வின் பெயர், கொடி மற்​றும் மாம்​பழம் சின்​னத்தை அன்​புமணி பயன்​படுத்த தடை விதிக்க வேண்​டும்.

பாமக தொடர்​பான உள்​கட்சி பிரச்​சினை முடிவுக்கு வரும் வரை மாம்​பழம் சின்​னத்தை முடக்கி வைக்க வேண்​டும் என கோரி ராம​தாஸ் தரப்​பில் சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் புதி​தாக 2 இடைக்​கால மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை, சென்னை பெருநகர 13-வது உதவி உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் நீதிபதி எம்​. தர்​மபிரபு முன்​பாக நடந்​தது. அப்​போது ராம​தாஸ் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ்​.பிர​பாகரன், “அன்​புமணி தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்ட பிறகே பாமக​வின் அங்​கீ​காரம் ரத்து ஆனது. கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தால் அன்​புமணி அடிப்​படை உறுப்​பினர் பதவி​யில் இருந்து நீக்​கப்​பட்​டு்ள்​ளார். மோசடி​யான ஆவணங்​களை தயாரித்து அன்​புமணி தேர்​தல் ஆணை​யத்தை ஏமாற்​றி​யுள்​ளார்” என வாதிட்​டார்.

பதி​லுக்கு பாமக பொதுச் செய​லா​ள​ரான வடிவேல் ராவணன் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா, “பாமக​வின் தலை​வ​ராக தன்னை அங்​கீகரிக்​கக் கோரி ராம​தாஸ் இந்த மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். ராம​தாஸ் ஏற்​கெனவே தலை​வ​ராக உள்​ளார் என்​றால் பிறகு எதற்​காக மீண்​டும் தன்னை தலை​வ​ராக அங்​கீகரிக்​கக் கோரு​கிறார். இந்த மனு தாக்​கல் செய்​யப்​பட்ட முறையே தவறானது. ராம​தாஸை சிலர் பின்​புறத்​தில் இருந்து தவறு​தலாக இயக்​கிக் கொண்​டிருக்​கின்​றனர்” என்​றார்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், “இந்த வழக்கு தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் நடை​பெறும் குடும்ப பிரச்​சினை. தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் ஏற்​கெனவே தேர்​தல் நடை​முறை​கள் தொடங்கி விட்டன என்​ப​தால் இவர்​கள் மனு​வில் கோரி​யிருப்​பது போல மாம்​பழம் சி்ன்​னத்தை முடக்க முடி​யாது. குறிப்​பாக, புதுச்​சேரி​யில் பாமக​வுக்கு மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்டு வேட்​புமனு தாக்​கலும் முடிவடைந்​து​விட்​டது.

தேர்​தல் தொடர்​பான நடவடிக்​கை​களில் நீதி​மன்​றம் தலை​யிட்டு எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யாது. மேலும், அன்​புமணி, ராம​தாஸ் என்ற தனிப்​பட்ட நபர்​களை பார்த்து சின்​னம் ஒதுக்​க​வில்​லை. பாமக என்ற கட்​சிக்கே மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது” என வாதிட்​டார்.

அன்​புமணி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சித்ரா சம்​பத், “தந்​தை, மகனுக்​கு இடை​யில் நடை​பெறும் பிரச்​சினையை வைத்து சிலர் அரசி​யல் ரீதி​யாக ஆதா​யம் தேட நினைக்​கின்​றனர், பாமக பதிவு பெற்ற கட்சி என்​ப​தால் முறைப்​படி மாம்​பழம் சின்​னத்தை தேர்​தல் ஆணை​யம் ஒதுக்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​ப​டா​விட்​டால் வாக்​காளர்​களுக்கு வீண் குழப்​பம் ஏற்​படும்” என வாதிட்​டார்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி எம்​.தர்​மபிரபு நேற்​றிரவு பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், “தேர்​தல் நடவடிக்​கைகள் ஏற்​கெனவே தொடங்கி விட்​ட​தால் அதில் நீதி​மன்​றம் தலை​யிட விரும்​ப​வில்​லை. பாமக​வின் மாம்​பழம் சின்​னம் தொடர்​பாக ராம​தாஸ் தரப்​பி்ல் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள 2 இடைக்​கால மனுக்​களும் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன.

அதே​நேரம் ராம​தாஸ் இந்த கோரிக்​கைகள் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்தை அணுகி பரி​காரம் தேடிக்​கொள்​ளலாம். அதே​போல, நிலு​வை​யில் உள்ள பிர​தான வழக்​கில் இடை​யீட்டு மனு​தா​ர​ராக கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரான வடிவேல் ராவணனை இணைக்க வேண்​டுமென்ற கோரிக்கை ஏற்​கப்​படு​கிறது. அன்​புமணிக்கு மாம்​பழம் சி்ன்​னம் ஒதுக்​கிய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தரவை ரத்து செய்ய வேண்​டுமென்ற கோரிக்​கை​யும் நிராகரிக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டுள்​ளார்.

உச்ச நீதி​மன்​றம் 3 நாட்​களில் இந்த வழக்​கில் தீர்வு காண வேண்​டுமென அறி​வுறுத்​தி​யிருந்த நிலை​யில், சென்னை உரிமை​யியல் நீதி​மன்ற நீதிபதி எம்​.தர்​மபிரபு 2 நாட்​களில் தீர்வு கண்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>ராமதாஸ் </p></div>
“ஈரான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in