தலைநகரில் களமிறங்கும் விசிக: விஜய்க்கு எதிராக ஷா நவாஸை நிறுத்தவும் பரிசீலனை

தலைநகரில் களமிறங்கும் விசிக: விஜய்க்கு எதிராக ஷா நவாஸை நிறுத்தவும் பரிசீலனை
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அந்தத் தொகுதியை தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறது விசிக. தொகுதி தங்களுக்குக் கிடைத்தால் ஆளூர் ஷா நவாஸை அங்கு நிறுத்தும் திட்டத்தில் அந்தக் கட்சி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 இடங்களை வென்றது. தற்போது அந்தக் கட்சி மாநிலக் கட்சி அங்கீகாரத்துடன் தேர்தல் களத்துக்கு வருவதால் இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை விரும்பியது. அந்தக் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், புதிய கட்சிகளின் வரவைக் காரணம் காட்டி விசிக-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இருப்பினும் கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கள் மற்றும் மதிமுக-வுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்பதால் விசிக-வுடன் இறுதியாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

மேலும், புதிய கட்சிகளின் வரவால் கூட்டணிக் கட்சிகள் முன்பு போட்டியிட்ட தொகுதிகளும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை விசிக வென்ற நாகை, திருப்போரூர் தொகுதிகள் இம்முறை வேறு கட்சிகளுக்கு போகலாம் எனக் கூறப்படுகிறது. இதில், ஆளூர் ஷா நவாஸ் விசிக துணைப் பொதுச்செயலாளராக இருப்பதால் அவருக்கு நாகைக்குப் பதிலாக சென்னையில் ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி சென்னையில் ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை விசிக-வுக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்தத் தொகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் உள்ளதால் இவை விசிக-வுக்கு சாதகமான தொகுதிகளாகப் பார்க்கப்படுகிறது. இதில் பெரம்பூர் அல்லது ராயபுரம் ஒதுக்கப் பட்டால் ஆளூர் ஷா நவாஸும் ஆர்.கே.நகர் கிடைத்தால் இன்னொரு துணைப் பொதுச்செயலாளரான வழக்கறிஞர் எழில் கரோலினும் நிறுத்தப்படுவார்கள் என்கிறார்கள்.

இதில், பெரம்பூர் தொகுதி தவெக தலைவர் விஜய்க்காக தயார்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை, இங்கு விஜய் நின்றால் அவரை எதிர்த்து விசிக போட்டியிடுமா அல்லது திமுக-வே மோதிப் பார்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தலைநகரில் களமிறங்கும் விசிக: விஜய்க்கு எதிராக ஷா நவாஸை நிறுத்தவும் பரிசீலனை
கடைசி நேரத்தில் கைகூடிய காங்கிரஸ் - திமுக கூட்டணி: பெரும்பாடுபட்டு சாதித்த பெருந்தகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in