வன்னியரசு அமைச்சராகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

வன்னியரசு அமைச்சராகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக எம்எல்ஏ வன்னியரசு பங்கேற்பார் என திருமா வளவன் அறிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மேலும், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முதல்வர் விஜய் சார்பில் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சரவையில் பங்கேற்கும் என அறிவித்தது.

எனினும், விசிக அமைச்சரவையில் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, விசிக தலைவர் திருமாவளவன் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார் என விசிக வட்டாரங்களில் தீவிரமாகப் பேசப்பட்டது.

ஆனால், அமைச்சர் பதவி தொடர்பான முடிவு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இதற்கிடையே, தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய முக்கிய துறைகள் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விசிக சார்பில் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராக பதவியேற் பார் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இப்போது அமைச்சரவையில் இடம்பெறும் அறிவிப்பை மட்டும் தெரிவிக்கிறோம்.

திமுக கூட்டணியில் தொடர்வது உள்ளிட்டவை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஒரிருநாட்களில் இது குறித்து அறிவிப்போம் என திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

வன்னியரசு அமைச்சராகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in