புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தால் சென்னை-பெங்களூருக்கு 73 நிமிடத்தில் பயணிக்கலாம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

பாஜக சார்​பில் அரசி​யலமைப்​புச் சட்ட நாள் விழா தி.நகர் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் நேற்று நடை​பெற்​றது. ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ், தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், மூத்த தலை​வர் தமி​ழிசை சவுந்​தரராஜன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.| படம்: எஸ்.சத்தியசீலன் |

பாஜக சார்​பில் அரசி​யலமைப்​புச் சட்ட நாள் விழா தி.நகர் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் நேற்று நடை​பெற்​றது. ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ், தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், மூத்த தலை​வர் தமி​ழிசை சவுந்​தரராஜன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.| படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 
2 min read

சென்னை: தமிழக பாஜக சார்​பில் இந்​திய அரசி​யலமைப்பு சட்ட நாள் விழா, சென்னை தி.நகரில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. மத்​திய ரயில்வேதுறை அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்று பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்​சிக்கு வரு​வதற்கு முன்பு, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி ஆட்​சி​யில் தமிழக ரயில்வே மேம்​பாட்​டுக்​காக ஆண்​டுக்கு ரூ.870 கோடி மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டது.

பிரதமர் மோடி ஆட்​சிக்கு வந்த பிறகு இந்த நிதி ஒதுக்​கீடு பல மடங்கு அதி​கரிக்​கப்​பட்​டது. தற்​போது தமிழகத்​துக்​கான ரயில்வே பட்​ஜெட் ஒதுக்​கீடு ரூ.7,600 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. மேலும், தமிழகத்​தில் ரயில்வே மேம்​பாட்​டுக்​காக ரூ.48,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அனுமதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

திட்​டங்​களுக்​குத் தேவை​யான சுமார் 4,800 ஹெக்​டேர் நிலத்​தில் இது​வரை 1,253 ஹெக்​டேர் மட்​டுமே கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதாவது, தேவை​யான நிலத்​தில் 24 சதவீதம் மட்​டுமே வழங்​கப்​பட்​டுள்​ளது. நிலம் கையகப்​படுத்தி வழங்​கு​வது மாநில அரசின் பொறுப்பு.

தமிழகத்​தில் தீபம் ஏற்​று​வதற்கு தடைகள் ஏற்​படுத்​தப்​படலாம். ஆனால், தமிழக மக்​களின் வளர்ச்​சி​யையும் முன்​னேற்​றத்​தையும் யாராலும் தடுக்க முடி​யாது. தமிழகத்​தில் 77 ரயில் நிலை​யங்​கள் மறுசீரமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

மத்​தி​யில் பாஜக ஆட்​சி​யில் இருப்​ப​தால் தமிழகத்​துக்கு வந்தே பாரத் ரயில்​கள் கிடைக்​காது என்று சிலர் குற்​றம் சாட்​டினர். ஆனால் அந்​தக் குற்​றச்​சாட்​டுகள் தவறானவை.

அடுத்த முக்​கிய இலக்​காக புல்லட் ரயில் திட்​டம் உள்​ளது. இந்​தத் திட்​டம் நடைமுறைக்கு வந்​தால், நாட்​டின் போக்​கு​வரத்​துத் துறை​யில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​படும். சென்னை - பெங்​களூரு இடையே தற்​போது பயணிக்க 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. புல்​லட் ரயில் சேவை தொடங்​கப்​பட்​டால் இந்​தப் பயண நேரம் சுமார் 73 நிமிடங்​களாகக் குறையும்.

இது விமானப் பயணத்​தைக் காட்​டிலும் விரைவானதாக இருக்​கும்.அதேபோல, சென்னை - ஹைத​ரா​பாத் இடையே தற்​போது 8 முதல் 12 மணி நேரம் வரைபயண நேரம் உள்ள நிலை​யில், புல்​லட் ரயில் திட்​டத்​தின் மூலம் ஹைத​ரா​பாத் - அம​ராவதி - சென்னை இடை​யி​லான பயணத்தை சுமார் 3 மணி நேரத்​தில் மேற்​கொள்ள முடியும்.

இந்​தி​யாவில் புல்​லட் ரயில்​கள் தயாரிக்​கும் பணிகளும் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தி​யப் பொறி​யாளர்​களின் திறமையையும் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யையும் உலக நாடுகள் வியந்து பார்க்​கின்​றன.

2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த தமிழ்​நாடு, வளர்ந்த இந்​தியா என்ற இலக்கை எட்ட அனைவரும் ஒன்​றிணைந்து செயல்​பட வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ் பேசினார்.

100 நாளில் கல்​லூர் ரயில் நிலை​யம்

நிகழ்ச்​சி​யில் பேசிய தமிழகப் பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், “திருநெல்​வேலி – அம்​பாசமுத்​திரம் இடையே உள்ள கல்​லூர் ரயில் நிலை​யம் பல ஆண்​டுகளாக மூடப்​பட்​டுள்​ளது. அதை மீண்​டும் திறந்து மக்​கள் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டுவர நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்று வலியுறுத்​தினார்.

அதை கேட்ட அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ், உடனடி​யாக மேடை​யில் இருந்​தவாறே ரயில்வே வாரியத் தலை​வரை செல்​போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அடுத்த சில நிமிடங்​களி​லேயே கல்​லூர் ரயில் நிலை​யம் 100 நாட்​களுக்​குள் மீண்​டும் திறக்​கப்​படும் என்று அவர் அறி​வித்​தார். அதை பார்த்த பாஜக நிர்​வாகி​கள் ஆச்​சரியம் அடைந்து எழுந்து நின்று கைதட்டி அமைச்​சருக்​குப் பாராட்டு தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>பாஜக சார்​பில் அரசி​யலமைப்​புச் சட்ட நாள் விழா தி.நகர் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் நேற்று நடை​பெற்​றது. ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ், தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், மூத்த தலை​வர் தமி​ழிசை சவுந்​தரராஜன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.| படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும்: முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கடிதம்

X