பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணையுமாறு தமிழகத்துக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம்

ஆட்சி அமைக்கும் தவெக என்ன செய்யப்போகிறது?
கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தில் இணை​யு​மாறு தமிழகத்​துக்கு மத்​திய அரசு மீண்​டும் கெடு விதித்​துள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது.

மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது. இதன்​மூலம் பள்​ளி​களின் கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. ஆனால், இந்த திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை இருப்​ப​தால் தமிழகம் இணைய மறுத்​து​விட்​டது. இதன் காரண​மாக, ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்​வித் திட்​டம் மூல​மாக தமிழகத்​துக்கு தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் மத்​திய அரசு நிறுத்தி வைத்​தது. இந்த விவ​காரம் கடந்த திமுக ஆட்​சி​யில் பெரும் சர்ச்​சை​யானது.

இந்​நிலை​யில், மத்​திய கல்வி அமைச்​சகம் தமிழக அரசுக்கு மீண்​டும் ஒரு கடிதம் எழு​தி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. அதில், பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று கெடு விதித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. தவெக தலை​மை​யில் புதிய அரசு அமைய உள்ள சூழலில் மத்​திய அரசு இந்த கடிதத்தை அனுப்​பியது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்த விவ​காரத்​தில் தவெக என்ன முடி​வெடுக்​கும், முந்​தைய திமுக அரசு​போல எதிர்ப்பு தெரிவிக்​குமா அல்​லது ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​மா, நிறுத்தி வைக்​கப்​பட்ட கல்விக்​கான நிதியை மத்​திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரி​யான நடவடிக்கை எடுக்​கும் என பல கேள்வி​கள் எழுந்​துள்​ளன. இதற்​கிடையே, பள்​ளிக்​கல்​வித் துறை​யில் இது​வரை மேற்​கொள்​ளப்​பட்ட நலத் திட்​டங்​கள், அதனால் பயன் பெற்​றவர்​கள், தேவையற்ற செயல்​பாடு​கள் தொடர்​பான முழு விவரங்​களை அறிக்​கை​யாகத் தரு​மாறு, விரை​வில் ஆட்சி அமைக்க உள்ள தவெக கேட்​டுள்​ள​தாக துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
பாலிடெக்னிக் 2-ம் ஆண்டில் நேரடி மாணவர் சேர்க்கை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in