

கோப்புப்படம்
சென்னை: தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு பதிவுக் கட்டணம் ரூ.150. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தகுதியுள்ள மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக மே 25-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் மாணவரின் புகைப்படம், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றைபதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.