“தவெகவின் வாஷிங் மெஷின் அரசியல்...” - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

உதயநிதி

உதயநிதி

Updated on
1 min read

சென்னை: “‘தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்’ என்று ஸ்கிரிப்ட் படி பொங்கிய முதல்வர், அடுத்த சீனில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்எல்ஏவாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு தீவிரம் ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்எல்ஏக்கள் பர்ச்சேஸை தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

‘தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்’ என்று ஸ்கிரிப்ட் படி பொங்கிய முதல்வர், அடுத்த சீனில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? சோஃபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>உதயநிதி</p></div>
‘ஞானம் அருளட்டும்...’ - சீஷெல்ஸ் விநாயகர் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி தமிழில் நெகிழ்ச்சிப் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in