“​காலை வாரி விட்டதுதான் தவறு” - உதயநிதி விளக்கம்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
1 min read

காலில் விழு​வது தவறில்​லை, சசிகலா காலை பழனி​சாமி வாரி விட்​டது​தான் தவறு என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

விழுப்​புரம் மாவட்​டம் திருக்​கோ​விலூர் தொகு​தி​யில் நேற்று திமுக வேட்​பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து துணை முதல்​வர் உதயநிதி பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “தமிழகத்​தில் நான் எங்கே பிரச்​சா​ரத்​துக்கு சென்​றாலும், ஒரு போட்​டோவை காட்​டு​மாறு மக்​கள் கேட்​கின்​றனர். அவர்​கள் கேட்​ப​தால் காண்​பிக்​கிறேன். பதவிக்​காக யார் காலிலும் விழும் அனுபவம் எனக்கு இல்​லை.

‘​முதல்​வர் பதவியை சசிகலா கொடுத்​தார், அதனால் காலில் விழுந்​தேன், அதில் என்ன தவறு?’ என பழனி​சாமி கேட்​கிறார். காலில் விழு​வது தவறில்​லை. முதல்​வர் பதவிக்கு வந்​ததும், சசிகலா காலை வாரி விட்டதுதான் தவறு. இந்த விவ​காரத்​தில், ‘தம்பி உதயநிதி பேசி​யதில் என்ன தவறு?’ என சசிகலா தற்​போது கேட்டு வரு​கிறார். நாம் அமை​தி​யாக வேடிக்​கை பார்ப்​போம்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின்</p></div>
“உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” - திமுகவுக்கு பழனிசாமி கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in