“உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” - திமுகவுக்கு பழனிசாமி கேள்வி

“உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” - திமுகவுக்கு பழனிசாமி கேள்வி
Updated on
1 min read

எம்​ஜிஆர், ஜெயலலி​தாவை கேலி பேசி​னார்​கள். எங்​களுக்கு எவ்​வளவு கோபம் வரும். உங்​களுக்கு வந்​தால் ரத்​தம், எங்​களுக்கு வந்​தால் தக்​காளி சட்​னி​யா? தனிப்​பட்ட விமர்​சனம் செய்​தால் அதற்கு தகுந்த பதிலடியை நாங்​கள் தரு​வோம் என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

அதி​முக கூட்​டணி சார்​பில் திருச்சி மாவட்​டத்​தில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்து திருச்சி பொன்​மலை ஜி கார்​னர் மைதானத்​தில் நேற்று மாலை பிரச்​சார கூட்​டம் நடை​பெற்​றது. கூட்​டத்​தில், அதி​முக பொதுச் செயலா​ளர் பழனி​சாமி பேசி​யதாவது: முதல்​வ​ராக ஸ்டா​லின் செய்​யும் தவறுகளை நான் விமர்​சிக்​கிறேன். ஆனால் அவர் அரசி​யல் ரீதி​யாக அல்​லாமல் தனிப்​பட்ட முறை​யில் விமர்​சிக்​கிறார்.

முதல்​வர் ஸ்டா​லின் இப்​போது தான் டீ கடைக்கு போவார், நடைப்ப​யிற்​சிக்கு போவார். மக்​கள் ஓட்​டுப் போட்டு அவரை முதல்​வ​ராக்​கியதற்கு இந்த காட்​சிகளை பார்த்​தது தான் மிச்​சம். மறைந்த தலை​வர்​களை நான் கொச்​சைப்​படுத்​து​வ​தாக ஸ்டா​லின் கூறுகிறார்.

திமுக எம்​.பி.திருச்சி சிவா, காம​ராஜரை கொச்​சைப்​படுத்தி பேசி உள்​ளார். அவரை கண்​டிக்க முடிந்​த​தா? எம்​ஜிஆர், ஜெயலலி​தாவை கேலி பேசி​னார்​கள். எங்​களுக்கு எவ்​வளவு கோபம் வரும். உங்​களுக்கு வந்​தால் ரத்​தம், எங்​களுக்கு வந்​தால் தக்​காளி சட்​னி​யா? தனிப்​பட்ட விமர்​சனம் செய்​தால் அதற்கு தகுந்த பதிலடியை நாங்​கள் தரு​வோம்.

திமுக​வினர் நடத்​தும் மருத்​து​வ​மனை​களில் கிட்னி முறை​கேடு நடந்​துள்​ளது. கிட்னி முறை​கேட்டில் ஈடு​பட்​ட​வர்​களுக்கு இந்த தேர்​தலில் மக்​கள் தண்​டனை வழங்க வேண்​டும். உங்​கள் கனவைச் சொல்​லுங்​கள் என்று மக்​களிடம் பெறப்​பட்ட ஆதார், செல்​போன் எண்​களை திமுக​வுக்கு தேர்​தல் பணி​யாற்​றும் ஒரு அமைப்​புக்கு கொடுத்து தேர்​தலுக்கு பயன்​படுத்​துகின்​றனர்.

மக்​களின் தரவு​களை அரசாங்​கம் தவறாக பயன்​படுத்​தலா​மா? அமைச்​சர் கே.என்​.நேரு​வின் நகராட்சி நிர்​வாகத் துறை​யில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்​துறை 3 முறை அறிக்கை சமர்ப்​பித்​தும் இது​வரை நடவடிக்கை இல்​லை. அதி​முக ஆட்​சி அமைந்​ததும்​ வி​சா​ரணை நடத்​தப்​படும்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

“உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” - திமுகவுக்கு பழனிசாமி கேள்வி
குடும்பத்துக்கு ஒரு செல்போன் வாக்குறுதி என்னாச்சு? - அதிமுகவை கேட்கிறார் கனிமொழி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in