தஞ்சாவூர்: உதயநிதியை வரவேற்க கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தஞ்சாவூர்: உதயநிதியை வரவேற்க கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர்: துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க தஞ்சாவூர் அருகே சாலையோரம் கொடிக் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி-திருவையாறு புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று (பிப்.6) திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.

அவரை வரவேற்பதற்காக திருமண மண்டபம் பகுதியில் இரும்புக் குழாயில் திமுக கொடியை ஊன்றும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

ஒரு இரும்புக் குழாயை ஊன்றும்போது, அது மேலே சென்ற மின்கம்பி மீது எதிர்பாராதவிதமாக உரசியுள்ளது. இதில், இரும்புக் குழாயை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த கோகுல்(29), சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(45) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது.

தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர். திமுக கொடிக் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர்: உதயநிதியை வரவேற்க கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in