சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் புதிய நீதிப​தி​களாக டி.லிங்​கேஸ்​வரன், பி.​கார்த்​தி​கேயன் ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்​டனர். அவர்​களுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்​மா​தி​காரி பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு 15 பேரை புதிய நீதிப​திகளாக நியமிக்க மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் பரிந்​துரை செய்​தது. இதில் முதல்​கட்​ட​மாக 13 பேரை நீதிப​தி​களாக நியமித்து குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்​தர​விட்​டார். அந்த பட்​டியலில் இருந்த சென்னை தொழிலா​ளர் நல நீதி​மன்ற முதன்மை நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி.​கார்த்​தி​கேயன் ஆகியோரை சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் கூடு​தல் நீதிப​தி​களாக நியமித்து குடியரசுத் தலை​வர் முர்மு கடந்த அக்​.13-ம் தேதி உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றக் கலை​யரங்​கில் இரு​வரும் நேற்று புதிய நீதிப​தி​களாக பதவி​யேற்​றனர். அவர்​களுக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார்.

விழா​வில் புதிய நீதிப​தி​களை வரவேற்​றுப் பேசிய அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், “சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எண்​ணிக்கை 67 ஆக உயர்ந்​திருப்​பது மகிழ்ச்​சிக்​குரியது. இதன்​மூலம் நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்கை குறைந்​து, நீதி பரி​பாலனம் சிறக்க புதிய நீதிப​தி​கள் இரு​வரும் தங்​களது சிறப்​பான பங்​களிப்பை வழங்​கு​வார்​கள். அவர்​களுக்கு தகுந்த ஒத்​துழைப்பு வழங்​கப்​படும்” என்​றார்.

மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏஆர்​எல் சுந்​தரேசன், தமிழ்​நாடு, புதுச்சேரி பார் கவுன்​சில் தலை​வர் செஞ்சி கே.க​திர​வன், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் தலை​வர் வி.ஆர்​.கமல​நாதன், லா அசோசி​யேஷன் தலை​வர் பி.செல்​வ​ராஜ், உயர் நீதி​மன்ற பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் என்​.எஸ்​.ரேவதி ஆகியோ​ரும் வரவேற்​றுப் பேசினர். பின்​னர், புதிய நீதிப​தி​கள் இரு​வரும் ஏற்​புரை வழங்​கினர்.

நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன்: நெல்லை மாவட்​டம் முது​மொத்​தன்​மொழியைச் சேர்ந்​தவர். 1974 மே 10-ம் தேதி பிறந்​தவர். சென்னை அம்​பேத்​கர் சட்​டக் கல்​லூரி​யில் சட்​டப் படிப்பை முடித்து 2000-ம் ஆண்டு வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்​தார். 2013-ல் மாவட்ட நீதிப​தி​களுக்​கான தேர்​வில் வெற்றி பெற்ற இவர் கரூர், சென்னை உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​யுள்​ளார். இவரது மனைவி ஆர்​.கீதா வழக்​கறிஞ​ராக உள்​ளார்.

நீதிபதி பி.​கார்த்​தி​கேயன்: இவர் 1973 டிச.9-ம் தேதி பிறந்​தவர். 1996-ம் ஆண்டு சட்​டப் படிப்பை முடித்து வழக்​கறிஞ​ராக பதிவு செய்த இவர், 2013-ம் ஆண்டு மாவட்ட நீதிப​தி​யாக தேர்வு செய்​யப்​பட்டு தரு​மபுரி, சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் மாவட்ட நீதிப​தி​யாக​வும், மாநில சட்​டத் துறை செயல​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். இவரது தந்தை பாலதண்​டா​யுதம் இந்​திய உணவுக் கழகத்​தில் அதி​காரி​யாகப் பணி​யாற்​றிய​வர். தாய் பி.ஜெயலட்​சுமி. மனை​வி என்​.லட்​சுமி.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
கூட்​டுறவு அங்​காடிகளில் மலிவு விலையில் பொருட்கள்: விலைவாசியை கட்டுப்படுத்துவதாக அமைச்சர் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in