கூட்​டுறவு அங்​காடிகளில் மலிவு விலையில் பொருட்கள்: விலைவாசியை கட்டுப்படுத்துவதாக அமைச்சர் உறுதி

அமைச்​சர் ப.வெங்கடரமணன்

அமைச்​சர் ப.வெங்கடரமணன்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் விலை உயர்​வைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில் கூட்​டுறவு அங்​காடிகளில் மலிவு விலையில் பொருட்கள் விற்​பனை செய்ய நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் ப.வெங்​கடரமணன் தெரி​வித்​தார்.

இது​குறித்து அவர் கூறிய​தாவது: அண்டை மாநிலங்​களான ஆந்​திரம், கர்​நாடகம் உள்​ளிட்ட மாநிலங்​களிலிருந்து சன்ன ரக அரிசி​யின் வரத்து குறைந்​துள்​ள​தால், தமிழகத்​தில் அரிசி விலை அதிகரித்​துள்​ளது.

அரசின் கையிருப்​பில் உள்ள 1 லட்​சம் மெட்​ரிக் டன் சன்ன ரக அரிசி​யில், முதல்​கட்​ட​மாக 25,000 மெட்​ரிக் டன் அரிசி பொது​மக்​களுக்கு விற்​பனை செய்​யப்​பட உள்​ளது. அமுதம் மற்​றும் கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படும் இந்த அரிசியை, பொது​மக்​கள் அதி​கபட்​சம் 5 கிலோ வரை வாங்​கலாம். இந்த வார இறுதி​யில் விற்​பனை தொடங்​கும்.

தேசிய வேளாண் கூட்​டுறவு சந்​தைப்​படுத்​து​தல் கூட்​டமைப்​பிடம் இருந்து முதல்​கட்​ட​மாக 500 மெட்​ரிக் டன் துவரம் பருப்​பைக் கொள்​முதல் செய்து, கிலோ ரூ.130-க்கு விற்​பனை செய்ய நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின்​கீழ் இயங்​கும் அமுதம் அங்​காடிகள் மற்​றும் கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் பொன்னி புழுங்​கல் அரிசி கிலோ ரூ.60-க்கும், உளுந்​தம் பருப்பு ரூ.140-க்கும், பூண்டு மற்​றும் தனியா தலா ரூ.240-க்கும், மிளகாய் ரூ.330-க்கும் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

உணவு பொருள்​களை பதுக்கி வைத்து செயற்​கை​யாக விலையை உயர்த்​து​வோர் மீது கடும் நட​வடிக்கை எடுக்​கப்​படும். இதை கண்​காணிக்க மாவட்ட அளவில் விலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அடுத்த ஓராண்​டுக்​குத் தேவை​யான அரிசி இருப்​பும், சர்க்​கரை, பாமாயில், பருப்பு உள்​ளிட்ட பொருள்​களின் அடுத்த 3 மாதத் தேவைக்​கான இருப்​பும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>அமைச்​சர் ப.வெங்கடரமணன்</p></div>
தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சேர்க்கைக்கு புதியதாக ‘எஸ்எஸ்ஆர்’ அமல்: தேர்தல் ஆணையம் அதிரடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in