விநாயகர் சதுர்த்தி: 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம் - திருமழிசை கலைஞர் அசத்தல்

விநாயகர் சதுர்த்தி: 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம் - திருமழிசை கலைஞர் அசத்தல்
Updated on
1 min read

சென்னை: ​​வி​நாயகர் சதுர்த்​திக்கு 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணப​தி’ நுண்​சிற்​பத்தை செதுக்கி திரு​மழிசையை சேர்ந்த கலைஞர் டி.கே.பரணி அசத்​தி​யுள்​ளார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம் திரு​மழிசையை சேர்ந்த தேசிய விருது பெற்ற நுண்​சிற்ப கலைஞர் டி.கே.பரணி. இவர் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்​டி, சந்தன கட்டையில் நுண்​ணிய வேலைப்​பாடு​களு​டன் கூடிய ‘குழலூதும் ஸ்ரீகணப​தி’ சிலையை வியக்​கத்​தக்க வகை​யில் வடிவ​மைத்​துள்​ளார். கற்பக விருட்ச மரத்​தின் கீழ் கணபதி அமர்ந்து புல்​லாங்​குழல் இசைப்​பது போன்ற தோற்​றத்​தில், வெறும் 20 நாட்​களில் இச்​சிற்​பத்தை தத்​ரூப​மாக செதுக்​கி​யுள்​ளார்.

இதில் மூல​வ​ரான ஸ்ரீகணப​தி​யின் உயரம் வெறும் 2 செ.மீ. மட்டுமே. விநாயகரின் வாக​ன​மான 4 எலிகள் தம்​பு​ரா, வயலின், ஜால்​ரா, மத்​தளம் ஆகிய இசைக் கருவி​களை வாசிப்​பது போன்று விநாயகரின் அருகே இடம்​பெற்​றுள்​ளன.

இந்த எலி சிலைகள் ஒவ்வொன்​றும் வெறும் அரை செ.மீ. அளவில் நுணுக்​க​மாக உருவாக்​கப்​பட்​டுள்​ளது காண்​போரை கவர்ந்​துள்​ளது.

கணப​தி, எலிகள் மற்​றும் கற்பக விருட்ச மரம் அனைத்​தும் ஒருங்கிணைந்த இந்த முழுச் சிற்​பத்​தின் மொத்த உயரம் மூன்றே முக்கால் அங்​குலம், அகலம் ஒன்றே முக்​கால் அங்​குலம் ஆகும். சந்தன கட்டையில் மட்​டுமல்​லாமல் ஒரு சிறிய அரிசி மணி​யிலும் சிலைகளை செதுக்​கும் அபாரத் திறன் கொண்ட டி.கே.பரணி, முன்​ன​தாக நுண்​ சிற்ப கலைக்​காக குடியரசுத் தலை​வரின் தேசிய விருதைப் பெற்​றவர் ஆவார். இவரது தாத்​தா, தந்தை மற்றும் சகோ​தரரும்​ தேசிய விருது பெற்​ற கலைஞர்​கள்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

விநாயகர் சதுர்த்தி: 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம் - திருமழிசை கலைஞர் அசத்தல்
திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க செப்.19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in