திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க செப்.19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க செப்.19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியீடு
Updated on
1 min read

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கு வரும் 19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்​படி, 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை, பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் சுப்​ர​பாதம், தோமாலை சேவை, அர்ச்​சனை, அஷ்டதள பாத பத்​மா​ராதனை சேவை போன்ற ஆர்​ஜித சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

இதில் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​கள் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை மதி​யம் 12 மணிக்​குள் கட்​ட​ணம் செலுத்தி டிக்​கெட்​டு​களை ஆன்​லைன் மூல​மாகவே பெற்​றுக்​கொள்​ளலாம்.

22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை மற்​றும் புஷ்ப​யாகத்​துக்​கான டிக்​கெட்​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவச​மாக அங்​கபிரதட்சண டோக்​கன்​களும், 11 மணிக்கு வாணி அறக்​கட்​டளைக்​கான டிக்​கெட்​களும், இதே நாள் மதி​யம் 3 மணிக்கு மாற்​றுத் திற​னாளி பக்​தர்​கள் மற்​றும் மூத்த குடிமகன்​களுக்​கான டிக்​கெட்​களை​யும் பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

24-ம் தேதி காலை 10 மணிக்​கு, டிசம்​பர் மாதத்​துக்​கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட்​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். அதே நாள் மதி​யம் 3 மணிக்கு திரு​மலை, திருப்​பதி யில் தங்​கும் அறை​களுக்கான டிக்​கெட்​களை​யும்​ முன்​ப​திவு செய்​து கொள்​ளலாம்​.

பிரம்மோற்சவ விழாவுக்கு அழைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 23-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி, நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நேரு, பனப்பாகா லட்சுமி, ஜானகி தேவி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா உள்ளிட்டோர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

அப்போது பிரம்மோற்சவ ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க செப்.19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியீடு
குஜராத்தில் கடைகள், உணவு விடுதிகள் வணிக வளாகங்கள் 24 மணி நேரம் திறப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in