பழனிசாமி மீதான கோபம், சவுமியா அமைச்சராகும் தகவலால் தவெகவுக்கு சென்ற பாமக வாக்குகள்

பழனிசாமி மீதான கோபம், சவுமியா அமைச்சராகும் தகவலால் தவெகவுக்கு சென்ற பாமக வாக்குகள்
Updated on: 
1 min read

சென்னை: பழனி​சாமி மீதான கோபத்​தா​லும், சவுமியா அன்புமணி அமைச்​ச​ராகும் தகவலால் மது​ராந்​தகம், தாராபுரத்தில் தவெக வேட்​பாளர்​களுக்கு பாமக​வின் வாக்​கு​கள் சென்​றுள்​ளன.

இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்​கு​களை​ பாமக வைத்​துள்​ள​தால், அவை யாருக்குச் செல்​லும் என்ற நிலை ஏற்​பட்​டது. தவெக அரசுக்கு ஆதரவு தரும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் அரசு மீது தொடர்ந்து விமர்​சனங்​களை வைப்பதை​யும்,

அமைச்​சர​வை​யில் இடம் பெற்றாலும் அவ்​வப்​போது விசிக தலைவர் விமர்​சனம் செய்​வதை​யும் முதல்​வர் விஜய் விரும்பவில்லை. எனவே 4 எம்​எல்ஏக்​கள் வைத்​துள்ள பாமகவை, கூட்​ட​ணியில் சேர்க்க முடிவு செய்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, கடந்த 2 மாத​மாக தவெக கூட்​ட​ணி​யில் பாமக இணைய இருப்​ப​தாக​வும், அக்​கட்​சி​யின் சட்​டப்​பேரவை குழு தலை​வர் சவுமியா அன்​புமணி அமைச்​சர​வை​யில் இடம்பெற உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளியாகின. இதனால் பாமக தொண்டர்​கள் மகிழ்ச்​சி​யில் உள்​ளனர். இந்தச் சூழ்​நிலை​யில், பாமக​வின் வாக்​கு​கள் தவெக வேட்​பாளர்​களுக்கு சென்​றுள்​ளன.

இதுதொடர்​பாக பாமகவினரிடம் கேட்டபோது, “2021-ம் ஆண்டில் அதி​முக ஆட்​சி கடைசி நேரத்​தில் வன்​னியர்​களுக்​காக 10.5 சதவீத இடஒதுக்​கீட்​டை, அப்​போதையை முதல்​வர் பழனி​சாமி வழங்​கி​னார். ஆனால், அது கிடைக்​காமல் போய்​விட்​டது. அதுதொடர்​பாக பழனி​சாமி இது​வரை பேச​வில்​லை.

இதனால், வன்​னியர் சமூகத்​தினரும், பாமக​வினரும் அதி​முக தலைமை மீது கோபத்​தில் உள்​ளனர். மத்​திய அரசின் சாதி​வாரி கணக்​கெடுப்பு முடிந்த பின்​னர் தமிழக அரசு சமூகநீதி கணக்​காய்​வினை நடத்​தும் என்று தவெக அரசு அறி​வித்​தது.

இதற்​காக, தவெக அரசை பாமக பா​ராட்​டியது. அதனால், மது​ராந்​தகம், தா​ராபுரத்​தில் பாமக​வின்​ வாக்​கு​கள்​ தவெக வேட்​பாளர்​களுக்​கு சென்​றுள்​ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

பழனிசாமி மீதான கோபம், சவுமியா அமைச்சராகும் தகவலால் தவெகவுக்கு சென்ற பாமக வாக்குகள்
இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாதக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in