இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாதக

இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாதக
Updated on: 
1 min read

சென்னை: இடைத்​தேர்​தலில் தனித்​துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி இரு தொகு​தி​களி​லுமே படு​தோல்​வியை சந்​தித்து டெபாசிட்டை பறி​கொடுத்​தது.

வாக்கு எண்​ணிக்கை முடி​வில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் ஜி.ஜானகி​ராமன் வெறும் 2,709 வாக்​கு​களை மட்​டுமே பெற்று நான்​காவது இடத்​துக்​குத் தள்​ளப்​பட்​டார். கடந்த 2026 பொதுத்​தேர்​தலில் இதே தொகு​தி​யில் அவர் பெற்ற 5,268 வாக்​கு​களில் ​பா​தியை மட்டுமே இம்​முறை பெற முடிந்​தது.

அதே​போல தாராபுரம் தொகு​தி​யிலும் வேட்​பாளர் எம்​.​கார்த்திகா 5,268 வாக்​கு​கள் மட்​டுமே பெற்று டெபாசிட்டை இழந்​தார். கடந்த பொதுத்​தேர்​தலில் இங்கு அக்​கட்சி வேட்​பாளர் திவ்யா வாங்​கிய 6,026 வாக்​கு​களை​விட​வும் இது குறைவு என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் படு​தோல்வி அடைந்து வாக்கு வங்கி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீத​மாக குறைந்த நிலை​யில், இந்த இடைத்​தேர்​தலிலும் டெபாசிட் இழந்தது தொண்​டர்​களை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது.

தேர்​தல் பிரச்​சா​ரங்​களின்​போது சீமானின் பேச்சை கேட்க கூடும் கூட்டமும் மில்​லியன் கணக்​கிலான சமூகவலைதள வியூஸ்​களும் வாக்குகளாக மாறவில்லை என அரசி​யல் விமர்​சகர்​கள் விமர்​சிக்​கத் தொடங்​கி​யுள்​ளனர். இதனால் கட்​சித் தொண்​டர்​கள்​ கவலை அடைந்​துள்​ளனர்​.

இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாதக
இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கியதன் பின்னணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in