செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டல்: தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

டி.விஜயகுமார்

டி.விஜயகுமார்

Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாவட்​டம் கணி​யம்​பாடி பகு​தி​களில் செங்​கல் சூளை உரிமை​யாளர்​களை மிரட்டி மாதம் ரூ.1 லட்​சம் மாமூல் கேட்ட விவ​காரத்​தில் தவெக ஒன்​றிய செய​லா​ளரின் பதவியை பறித்​ததுடன், கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் பதவி​யில் இருந்​தும் அவர் நீக்​கப்​பட்​டுள்​ளார்.

வேலூர் மாவட்​டம் கணி​யம்​பாடி ஊராட்சி ஒன்​றி​யத்​துக்கு உட்​பட்ட கணி​யம்​பாடி புதூர், நெல்​வாய், வல்​லம் உள்​ளிட்ட பகு​தி​களில் 50-க்​கும் மேற்​பட்ட செங்​கல் சூளை​கள் உள்​ளன.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில் கணி​யம்​பாடி கிழக்கு ஒன்​றிய தவெக செய​லா​ளர் விஜயகு​மார் மற்​றும் நிர்​வாகி​கள் கடந்த 22-ம் தேதி செங்​கல் சூளை உரிமை​யாளர்​களிடம் மாதம் ரூ.1 லட்​சம் மாமூல் கொடுத்​தால்​தான் தொழில் செய்ய முடி​யும் என கேட்டு மிரட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பான, வீடியோ காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் பரவிய​தால் சலசலப்பு ஏற்​பட்​டது. மேலும், பாதிக்​கப்​பட்ட செங்​கல் சூளை உரிமை​யாளர்​கள் வேலூர் கிராமிய காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

அதன்​மீது போலீ​ஸார் நடவடிக்கை எடுக்​காமல் செங்​கல் சூளை உரிமை​யாளர்​களை சமா​தானம் செய்ய முயன்​றனர். ஆனால், போலீ​ஸார் நடவடிக்கை எடுக்​காததை கண்​டித்து கணி​யம்​பாடி காவல் நிலை​யம் அரு​கே​யுள்ள வேலூர்-திரு​வண்​ணா​மலை கூட்​டுச்​சாலை சந்​திப்​பில் நேற்று முன்​தினம் திடீர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதில், செங்​கல் சூளை உரிமை​யாளர்​கள் மற்​றும் தொழிலா​ளர்​கள் உட்பட 300-க்​கும் மேற்பட்​டோர் பங்​கேற்​றனர். பின்னர் மறிய​ல் செய்தனர். இதையடுத்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களு​டன் வேலூர் வரு​வாய் கோட்​டாட்​சி​யர் செந்​தில்​கு​மார் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

அதில், புகாருக்கு உள்​ளான தவெக நிர்​வாகி​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என உறு​தி​யளித்​தனர். இதனையேற்று போராட்​டம் முடிவுக்கு வந்​தது.

இந்​நிலை​யில், கட்​சி​யின் நற்​பெயருக்கு களங்​கம் விளைவிக்​கும் வகை​யில் செயல்​பட்​ட​தாக தவெக கணி​யம்​பாடி கிழக்கு ஒன்​றிய செய​லா​ளர் டி.​விஜயகு​மார் கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் உட்பட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் நீக்​கம் செய்து தவெக ராணிப்​பேட்டை மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஜி.​விஜய் மோகன் அறிக்கை வெளியிட்​டுள்​ளார்​.

<div class="paragraphs"><p>டி.விஜயகுமார்</p></div>
காமன்வெல்த் செஸ்: இனியன் சாம்பியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in