காமன்வெல்த் செஸ்: இனியன் சாம்பியன்

காமன்வெல்த் செஸ்: இனியன் சாம்பியன்
Updated on
1 min read

ஈரோடு: இலங்​கை​யில் கடந்த 16-ம் தேதி தொடங்​கிய காமன்​வெல்த் செஸ் சாம்​பியன் ஷிப் 2026 போட்டி நேற்று நிறைவடைந்​தது.

இதில், இந்​தி​யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ர் ஈரோடு பா.இனியன் ரேபிட் மற்​றும் பிளிட்ஸ் பிரிவு​களில் தலா 7 ஆட்​டங்​களில் 6.5 புள்​ளி​கள் பெற்று இரு பிரிவு​களி​லும் தங்​கப்​ப​தக்​கம் வென்று சாம்​பியன் பட்​டம் பெற்​றார்.

ரேபிட் பிரி​வில் ஸ்ரீஹரி வெள்​ளிப்​ப​தக்​கத்​தை​யும், மித்​ரபா வெண்​கலத்​தை​யும் வென்​றனர்.

பிளிட்ஸ் பிரி​வில் ரோஹித் கிருஷ்ணா வெள்​ளிப் பதக்​கத்​தை​யும், ஸ்ரீஹரி வெண்​கலப் பதக்​கத்​தை​யும் வென்​றனர்.

கிளாசிக்​கல் பிரி​வில் மித்​ரபா சாம்​பியன்​பட்​டம் வென்​றார். ரணிந்து லியானகே வெள்​ளிப்​ப​தக்​கத்​தை​யும், ஸ்ரீஹரி வெண்​கலப் பதக்​கத்​தை​யும் வென்​றனர்.

காமன்வெல்த் செஸ்: இனியன் சாம்பியன்
அணுசக்தி மின்திட்டங்களை செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in