விஜய் முதல்வராவதை தடுக்கக் கூடாது: ஆளுநர் மாளிகை முன்பு தவெகவினர் போராட்டம்

விஜய் முதல்வராவதை தடுக்கக் கூடாது: ஆளுநர் மாளிகை முன்பு தவெகவினர் போராட்டம்
Updated on
1 min read

சென்னை: தவெக தலை​வர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்​காத ஆளுநரை கண்​டித்​து, தவெக தொண்​டர்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​​யின் தவெக 108 இடங்​களை கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. இருப்​பினும் ஆட்சி அமைக்க தேவை​யான 118 எம்​எல்​ஏக்​கள் இல்​லை.

இதனால், தவெகவால் ஆட்சி அமைக்க முடி​யாத சூழ்​நிலை நில​வியது. இந்​நிலை​யில், திமுக கூட்​ட​ணியில்​இருந்து விலகி காங்​கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரி​வித்​தது.

அக்​கட்​சிக்கு 5 எம்​எல்​ஏக்​கள் உள்​ள​தால் தவெக எம்​எல்​ஏக்​களின் பலம் 113 ஆக உயர்ந்தது. இதைத்​தொடர்ந்து விஜய் தமிழக ஆளுநரை இரண்டு முறை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி​னார்.

மேலும், பதவி ஏற்​புக்கு பின் சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தாக கூறி​னார். ஆனால், ஆளுநர் இது​வரை​யில் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்​க​வில்​லை. மேலும், திமுக​வும், அதி​முக​வும் கூட்​டணி அமைத்து ஆட்சி பொறுப்​புக்கு வர உள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் தகவல் பரவியது.

இந்​நிலை​யில், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்​காத ஆளுநரை கண்​டித்து தவெக தொண்​டர் ஒரு​வர் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று சங்கு ஊதி போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

விஜய் முதல்​வ​ராவதை தடுக்​காதே, மறுக்​காதே... மறுக்​காதே... மக்​கள் தீர்ப்பை மறுக்​காதே, தடுக்​காதே... தடுக்​காதே விஜய் முதல்​வ​ராவதை தடுக்​காதே என சங்கு ஊதி ஆக்​ரோஷ​மாக முழக்​கமிட்​டார்.

இதையடுத்​து, அங்​கிருந்த போலீ​ஸார் அவரை கைது செய்து அழைத்​துச் சென்​றனர். இதையடுத்​து, விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க கோரி தவெக தொண்​டர் ஒரு​வர் ஆளுநர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்​ணா​விரதம் மேற்​கொள்ள முயன்​றார். அவரை போலீ​ஸார் கைது செய்து அப்​புறப்​படுத்​தினர்.

இது ஒரு​புறம் இருக்க விஜய்க்கு முதல்​வ​ராக பதவிப் பிர​மாணம் செய்து வைக்க வலி​யுறுத்தி கையில் பதாகையை ஏந்தி தவெக தொண்​டர் ஒரு​வர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

மேலும், ஒரு பெண், ஆளுநர் மாளிகை முன்பு வந்​து, ‘நாடே அழுகிறது... விஜய் முதல்​வ​ராக வர வேண்​டும்’ என கோஷமிட்​ட​வாறு தவெக கொடி​யுடன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். இது​போன்ற நிகழ்​வு​களால் ஆளுநர் மாளிகை பகுதியில் பரபரப்பு ஏற்​பட்​டது.

விஜய் முதல்வராவதை தடுக்கக் கூடாது: ஆளுநர் மாளிகை முன்பு தவெகவினர் போராட்டம்
தஞ்சாவூர் | தவெக எம்எல்ஏ வீடியோ: சைபர் க்ரைம் போலீஸார் எக்ஸ் தளத்துக்கு கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in