

மதுரை: திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முருகன் ஆசிர்வாதம் இருப்பதால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியவில்லை என்றாலும், தற்காலிக தீர்வாக 24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றிக் கொள்ள ஒரு நாள் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.
நான் எனது வன்மையான கண்டனத்தை தவெக அரசுக்கு பதிவு செய்கிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசுக்கு எந்த வேலையும் கிடையாது. இது நிரந்தர தீர்வு இல்லை. இது ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தான். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த நாளை, நட்சத்திரத்தை, உணர்வை மதித்துள்ளனர்.
வாக்கு வங்கிக்காக அரசியல் ஆய்வு செய்கிறோம் என சிறுபான்மையினரை ஏமாற்றுகின்றனர். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என அனைவரையும் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தவெக அரசு ஏமாற்றுகிறது.
அமைச்சர் நிர்மல்குமார் பதில் தேவையில்லை. முதல்வர் விஜய்யின் பதில் வேண்டும். இந்துக்களின் உணர்வை மதிக்கிறீர்களா இல்லையா என பதில் வேண்டும். தமிழக அரசு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை மதிக்கவில்லை. புறக்கணிக்கப்படுபவர்களுக்கு கடைசி தீர்வு நீதிமன்றம். அந்த நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டேன் என சொல்வது இந்துக்களை எவ்வளவு தூரம் புண்படுத்தும்.
‘நியாயம் கொடு முருகா’ என முருகனிடமே கேட்கப் போகிறேன். நாங்கள் அனைவரும் ஏற்றப்படும் என்கிற எண்ணத்தில் தான் இருக்கிறோம். தீர்ப்புக்கு தான் மேல்முறையீடு செய்ய முடியும். ஏற்பாட்டிற்கு மேல்முறையீடு செய்ய முடியாது.மேல்முறையீடு மூலம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்கிற மன நிலையை இந்துக்களுக்கு தெரியப்படுத்தி விட்டனர்.
இங்கு நடக்கும் திருவிழாக்களுக்கு இந்துக்களுக்கு இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களுக்கு இந்துக்களும் உதவுகின்றனர். விசிக கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், தவெக கட்சிகளால் பிரச்சினை ஏற்படுகின்றன என்று கூறினார்.