திமுகவினர் பணப்பட்டுவாடா, வாக்காளர்களுக்கு மிரட்டல்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்

திமுகவினர் பணப்பட்டுவாடா, வாக்காளர்களுக்கு மிரட்டல்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்
Updated on: 
1 min read

சென்னை: மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக​வினர் பணப்​பட்​டு​வாடா செய்​வ​தாக​வும், வெளி​யாட்​களை கொண்டு வாக்​காளர்​கள் மிரட்​டு​வ​தாக​வும் தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிடம் தவெக சார்​பில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மது​ராந்​தகத்தில் திமுக​வினர் பணப்​பட்​டு​வாடா செய்வதாகவும் வாக்​காளர்​கள் மிரட்​டப்​படு​வ​தாக​வும் தவெக வழக்​கறிஞர் அணி நிர்​வாகி சங்​கர் மனு அளித்​துள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக ​பெரிய வெற்​றிபெறும். இதனை பொறுத்துக் கொள்ள முடி​யாத திமுக​வினர் தோல்​வியைத் தவிர்க்​கும் நோக்​கில் தொகுதி முழு​வதும் தங்​களது பணபலத்​தைப் பயன்​படுத்தி அப்​பட்​ட​மாகப் பணப்​பட்​டு​வா​டா​வில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அதே​போல், தேர்​தல் பிரச்​சா​ரம் என்ற போர்​வை​யில், வெளி மாவட்​டங்​களைச் சேர்ந்த திமுக​வினர் மற்​றும் தொண்​டர்​கள் பலர் குழுக்​களாக பிரிந்து தொகுதி முழு​வதும் இறக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் தவெக​வுக்கு ஆதர​வாக இருக்​கும் வாக்​காளர்​களைக் கண்​டறிந்​து, அவர்​களை நேரடி​யாகச் சந்​தித்து மிரட்டி வரு​கின்​றனர்.

மேலும், மது​ராந்​தகம் தொகுதி 80 சதவீதத்​துக்​கும் மேல் கிராமப்​புறப் பகு​தி​களை உள்​ளடக்​கிய​தாகும். தற்​போது தேர்​தல் ஆணை​யம் அமைத்​துள்ள வீடியோ கேம​ராக்​கள் மற்​றும் ரோந்து வாக​னங்கள் அனைத்​தும் பிர​தான சாலைகளி​லும், நகர்ப்​புற பஜார் பகு​தி​களி​லும் மட்​டுமே உள்​ளது. உள்​பகுதி கிராமங்​களுக்​குள் தேர்​தல் பறக்​கும் படை​யினரோ, நிலை​யான கண்​காணிப்​புக் குழு​வினரோ செல்​வ​தில்​லை. இதனால் கிராமப்​புற தனி வீடு​களுக்​குச் சென்று நள்​ளிர​வில் பணப்​பட்​டு​வாடா செய்​யும் முயற்​சிகள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன.

எனவே, கிராமப் பகு​தி​களில் கண்​காணிப்​பைத் தீவிரப்​படுத்த வேண்​டும் என தேர்​தல் ஆணை​யரிடம் கேட்​டுக்கொண்​டோம். எங்​கள் தரப்​பில் தரப்​பட்​டுள்ள மனு​வின் மீது உடனடி​யாக உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் தேர்​தல் ஆணை​யர் உறு​தி​யளித்​துள்​ளார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

திமுகவினர் பணப்பட்டுவாடா, வாக்காளர்களுக்கு மிரட்டல்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்
“எம்ஜிஆர், ஜெ. போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in