234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு: 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்

இன்றே வேட்புமனு தாக்கல் செய்ய திட்டம்
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், தமிழகத்​தின் 234 தொகு​திகள் மற்​றும் புதுச்​சேரி​யில் 28 தொகுதிகளில் போட்​டியிடும் தவெக வேட்​பாளர்​கள் பட்​டியலை ஒரே கட்​ட​மாக விஜய் வெளி​யிட்​டார்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், தமிழகத்​தின் 234 தொகு​திகள் மற்​றும் புதுச்​சேரி​யில் 28 தொகுதிகளில் போட்​டியிடும் தவெக வேட்​பாளர்​கள் பட்​டியலை ஒரே கட்​ட​மாக விஜய் வெளி​யிட்​டார்.

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி 234 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர்​களை தவெக தலை​வர் விஜய் நேற்று அறி​வித்​தார். பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் அவர் போட்​டி​யிடு​கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஜேசிடி பிரபாகர், ராஜ்மோகன், சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப் பாளையத்தில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதில் திமுக, அதி​முக, தவெக, நாதக என நான்​கு​முனைப் போட்டி நில​வு​கிறது. திமுக,அதி​முக கூட்​டணி கட்​சிகளில் பெரும்​பாலும் வேட்​பாளர்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு​விட்​டது. நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஏற்​கெனவே 234 தொகு​தி​களுக்​கும் ஒரே கட்​ட​மாக வேட்​பாளர்​களை அறி​வித்​து​விட்​டார்.

இதற்​கிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தனித்​துப் போட்​டி​யிடு​கிறது என்​பதை கட்​சித் தலை​வர் விஜய் சமீபத்​தில் உறு​தி​செய்​தார். இந்​நிலை​யில், சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், தமிழகத்​தின் 234 தொகு​தி​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர்​கள் பட்​டியலை ஒரே கட்​ட​மாக விஜய் வெளி​யிட்​டார். அதன்​படி, பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் விஜய் போட்​டி​யிடு​கிறார்.

தியாக​ராய நகர் - புஸ்ஸி ஆனந்த், வில்​லி​வாக்​கம் - ஆதவ் அர்​ஜு​னா, ஆயிரம் விளக்கு - ஜேசிடி. பிர​பாகர், எழும்​பூர் - ராஜ்மோகன், திருப்​பரங்​குன்​றம் - சிடிஆர். நிர்​மல்​கு​மார், கொளத்​தூர் - வி.எஸ்​.​பாபு, சேப்​பாக்​கம் - செல்​வம், விரு​கம்​பாக்​கம் - சபரி​நாதன், வேளச்​சேரி - கிறிஸ்டி பிரித்​தி​வி, ஆர்​.கே.நகர் - மரிய​வில்​சன், துறை​முகம் - சினோரா அசோக், மயி​லாப்​பூர் - வெங்​கட்​ராமன், அண்ணா நகர் - ராம்​கு​மார், சோழிங்​கநல்​லூர் - ஈசிஆர். சரவணன், ராயபுரம் - கோகுல், திரு.​வி.க நகர் - பல்​ல​வி,திருப்​பூர் வடக்கு - சத்​ய​பா​மா, கவுண்​டம்​பாளை​யம் - கனி​மொழி, ஆம்​பூர் - இம்​தி​யாஸ், திருச்​செங்​கோடு - அருண்​ராஜ் போட்​டி​யிடு​கின்​றனர்.

அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன் கோபிச்​செட்​டிப்​பாளை​யத்​தி​லும், குப.கிருஷ்ணன் லால்​குடி​யிலும் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதே​போல மாற்​றுக் கட்​சி​யில் இருந்து வந்த பலருக்​கும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. மொத்​த​மாக 23 பெண்​கள், 11 முஸ்​லிம்​கள், 11 கிறிஸ்​தவர்​களுக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

‘மக்​கள் பணத்தை சுருட்ட மாட்​டேன்’ - விஜய் தலை​மை​யில் அனைத்து வேட்​பாளர்​களும், ‘மக்​கள் பணத்தை சுருட்ட மாட்​டேன். பெண்​கள் பாது​காப்பை உறுதி செய்​வேன். போதை இல்​லாத தமிழகத்தை உரு​வாக்​கு​வேன். ஊழல் கறை படிய​விட மாட்​டேன். இது உறு​தி​மொழி அல்ல, உத்​தர​வாதம்’ என்று உறுதி ஏற்​றனர்.

பறக்​கும் படை சோதனை: வேட்​பாளர்​களை அறி​முகம் செய்த பிறகு, அவர்​களை அழைத்து விஜய் சில ஆலோ​சனை​களை வழங்​கி​னார். அப்​போது, தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் அங்கு வந்து சோதனை நடத்​தினர். தேர்​தல் ஆணை​யம் அனு​ம​தித்​ததை​விட அதிக நபர்​கள் இந்த நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்​டனரா என்று ஆய்வு செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதற்​கிடையே, தேர்​தலில் சீட் கிடைக்​காத ஒரு​வர் 100-க்​கும் மேற்​பட்ட ஆதர​வாளர்​களு​டன் திரண்டு ஓட்​டலுக்கு வெளியே ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் சலசலப்பு ஏற்​பட்​டது.

வேட்​புமனு தாக்​கல் தொடங்​கும் நாளான இன்றே தமிழகத்​தின் அனைத்து தொகு​தி​களி​லும் தவெக​வினர் மனு தாக்​கல் செய்ய உள்​ளனர். பெரம்​பூரில் விஜய் மனு தாக்​கல் செய்ய உள்ளார் என்று கூறப்​படு​கிறது.

உதவி​யாளரின் மகனுக்கு வாய்ப்பு: விஜய்​யிடம் கார் ஓட்​டுந​ராக வேலைக்கு சேர்ந்து கடந்த 30 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி வருபவர் ராஜேந்​திரன். தற்​போது விஜய்​யின் உதவி​யாள​ராக எந்​நேர​மும் அவரது நிழல்​போல இருப்​பவர். அவருக்கு கட்​சிப் பொறுப்பு வழங்க விஜய் திட்​ட​மிட்ட நிலை​யில், தனக்கு வயதாகி​விட்​ட​தாக கூறி ராஜேந்​திரன் மறுத்​த​தால், அவரது மகன் சபரி​நாதனுக்கு மாவட்​டச் செய​லா​ளர் பதவி வழங்​கி​னார் விஜய். தற்​போது சபரி​நாதன் விரு​கம்​பாக்​கம் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

நேற்று மேடை​யிலேயே தந்தை - மகன் இரு​வரும் கண்​ணீர் மல்க விஜய்யை கட்​டியணைத்து நன்றி தெரி​வித்​தது கூட்​டத்​தில் நெகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதே​போல தன் நீண்​ட​கால நண்​ப​ரான இயக்​குநர், நடிகர் ஸ்ரீ​நாத்தை தூத்​துக்​குடி வேட்​பாள​ராக விஜய் அறி​வித்​துள்​ளார். வேட்​டைக்​காரன், மாஸ்​டர் உள்​ளிட்ட திரைப்​படங்​களில் இவர் நடித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், தமிழகத்​தின் 234 தொகு​திகள் மற்​றும் புதுச்​சேரி​யில் 28 தொகுதிகளில் போட்​டியிடும் தவெக வேட்​பாளர்​கள் பட்​டியலை ஒரே கட்​ட​மாக விஜய் வெளி​யிட்​டார்.</p></div>
இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in