இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் என்ன?

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி திமுக தேர்​தல் அறிக்​கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளி​யிட்​டார். வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோக பொருட்​கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்​பில் கூப்​பன் வழங்​கும் 'இல்​லத்​தரசி' திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று அவர் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, திமுக தேர்​தல் அறிக்​கையை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று வெளியிட்டார். அவர் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மகளிர் உரிமைத்​தொகை உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களைச் செயல்​படுத்தி தமிழகத்தை அனைத்து துறை​யிலும் வளர்த்​தோம்.

தொலைநோக்​குத் திட்​டங்​கள் மூல​மாக தமிழகம் முழு​மை​யான வளர்ச்​சி​யைப் பெற்​றுள்​ளது. தமிழகத்​தில் கல்​வியை, கட்​டமைப்​பை, சமூகநீ​தி​யை, இது​வரை நாம் அடைந்த முன்​னேற்​றத்தை பாது​காக்க வேண்​டு​மா​னால் திமுக ஆட்​சி தொடர வேண்​டும். திரா​விட மாடல் 2.0 அமைய வேண்​டும்.

அதற்கு அடித்​தள​மாக, உங்​களின் கனவு​களை நிறைவேற்ற ‘ஸ்டா​லின் ஸ்டேட்​மென்ட்டை (Stalin Statement)’ வழங்​கி​யிருக்​கிறேன். அதன் விரி​வாக்​கம்​தான் திமுக​வின் தேர்​தல் அறிக்​கை. வரு​மான வரி செலுத்​தாத குடும்​பங்​களைச் சேர்ந்த இல்​லத்​தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்​பிலான கூப்​பனை பயன்​படுத்தி வாஷிங் மெஷின், டிவி. பிரிட்ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்​களை புதி​தாக வாங்​கிக்​கொள்ள அல்​லது ஏற்​கெனவே பயன்​படுத்தி வரும் பழைய பொருட்​களுக்கு மாற்​றாக​ பெற்​றுக்​கொள்ள ‘இல்​லத்​தரசி' திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

முதல்​வரின் காலை உணவு திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்​தப்​படும். 1.31 கோடி சகோதரி​கள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ​ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். இலவச மின்​சா​ரம் பெறும் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும்.

அடுத்த 5 ஆண்டு​களில் 10 லட்​சம் புதிய வீடு​கள் கட்​டித்​தரப்​படும். முதல்​வரின் மருத்​துவக் காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​வதற்​கான வரு​மான வரம்பு ரூ.5 லட்​ச​மாக​வும், காப்​பீட்​டுத்​தொகை ரூ.10 லட்​ச​மாக​வும் உயர்த்​தப்​படும். நெல் கொள்​முதல் விலை குவின்​டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்​முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்​கப்​படும். முதி​யோர் உதவித்​தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிர​மாக​வும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடி தடைக்​கால சிறப்பு நிவாரணத் ​தொகை ரூ.8 ஆயிரத்​தில் இருந்து ரூ.12 ஆயிர​மாக​வும், மீன்​பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்​தொகை ரூ.6 ஆயிரத்​தில் இருந்து ரூ.9 ஆயிர​மாக​வும் உயர்த்​தப்​படும். சுயஉதவிக் ​குழு உறுப்பின​ராக இருக்​கும் பெண்​களை, தொழில் ​முனை​வோ​ராக முன்​னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படும்.

பேரிடர் கால இழப்​பீடு​கள் ஹெக்​டேர் ஒன்​றுக்​கு, இறவைப் பாசன பயிர்​கள் மற்​றும் நெற்​ப​யிர்​களுக்கு ரூ.25 ஆயிரம், நீண்​ட​கால பயிர்​களுக்கு ரூ.27 ஆயிரம், மானாவரி பயிருக்கு ரூ.12 ஆயிர​மாக உயர்த்தி வழங்​கப்​படும். அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​காக அறிவிக்​கப்​பட்ட தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் சிறப்​பாக செயல்​படுத்​தப்​படும். 8-வது ஊதி​யக்​குழு அறிக்​கையை மத்​திய அரசு செயல்​படுத்​தி​யதும், மாநில அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கும் செயல்​படுத்​தப்​படும். 1.50 லட்​சம் அரசு காலி ​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்.

உயர்​கல்வி பயிலும் 35 லட்​சம் மாணவர்​களுக்கு 5 ஆண்​டு​களில் மடிக்​கணினி வழங்​கப்​படும். தகவல் தொழில்​நுட்ப ஏற்​றுமதி ரூ.2.50 லட்​சம் கோடியில்​இருந்து ரூ.5 லட்​சம் கோடி​யாக உயர்த்​தப்​படும். ஆயிரம் கிராம தெய்வ கோயில்​கள் மறுசீரமைக்​கப்​படும். 5 ஆயிரம் கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்தப்​படும்.

சிறு​பான்​மை​யினர் தொழில் தொடங்க டாம்கோ (TAMCO) மூலம் கடன் பெறும் உச்​சவரம்பு ரூ.30 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். முதல்​வரின் கிராம சாலை திட்​டத்​தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் ரூ.10 ஆயிரம் கோடி​யில் சீரமைக்​கப்​படும். அனைத்து மாநக​ராட்​சிகள், முக்​கிய நகராட்​சிகளில் 50 புதிய செம்​மொழி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும். திருச்​சி, மதுரை, கோவை, சேலம் மாநக​ராட்​சிகளின் அரு​கில் நவீன உலகத்தர வசதி​களு​டன் புதிய நகரங்​கள் அமைக்​கப்​படும். தமிழகத்​தில் 10 கைத்​தறி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும்.

தமிழகத்​தில் திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. இப்​போது இது சூப்​பர் ஸ்டா​ராக களமிறங்​கி​யுள்​ளது. இதில் இடம்​பெற்​றுள்ள அனைத்து வாக்​குறு​தி​களும் சட்​டங்​கள், மாபெரும் திட்​டங்​களாக​வும் மாறும். இவ்​வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளார்.தேர்​தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலை​வர் கனி​மொழி, உறுப்

​பினர்​கள் டிகேஎஸ்​. இளங்​கோவன், கோவி.செழியன், பிடிஆர்​.பழனிவேல் தி​யாக​ராஜன்,டிஆர்​பி. ​ராஜா உள்​ளிட்​டோரை முதல்​வர்​ கவுர​வித்​தார்​. கட்​சி​யின்​ பொதுச் ​செய​லா​ளர்​ துரை​முரு​கன்​, பொருளாளர்​ டி.ஆர்​.​பாலு உள்​ளிட்​டோர்​ பங்கேற்றனர்​. கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘‘திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் உண்மையை பேசக்கூடியதேர்தல் அறிக்கை எதுவோ,யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்களோ, அந்த தேர்தல் அறிக்கைக்குதான் மரியாதையும் செல்வாக்கும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in