

சென்னை: தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு இன்று முதல் (நவ.1) போக்குவரத்து அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்திச் செல்வதைத் தடுக்க கனிம வளங்களைக் கொண்டுசெல்லும் அனைத்து வகை சரக்கு வாகனங்களிலும் ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட வேண்டும்.
இன்று முதல் ஜிபிஎஸ் பொருத்தப்படாத கனிமவள வாகனங்களுக்குப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்படமாட்டாது. ஜிபிஎஸ் கருவி மற்றும் செல்லத்தக்க அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்து உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.