

சென்னை: அம்பத்தூர்- கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் காயத்ரி (18). இவர் சூரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு பொறியியல் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து, வீடு திரும்புவதற்காக பட்டரவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, அம்பத்தூர் - வில்லிவாக்கம் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ஜெய்ப்பூர் விரைவு ரயில் அவர் மீது மோதியுள்ளது. தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பெரம்பூர் ரயில்வே போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.