சென்னை | எல்.பி. சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மெட்ரோ ரயில் பாதை அமைக்​கும் பணி​கள் நடை​பெறு​வதை ஒட்​டி, பல்​வேறு போக்குவரத்து மாற்​றங்​களை சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸார் அறி​வித்​துள்​ளனர்.

அதன் விபரம்: எல்​.பி. சாலை​யில் பெட்​ரோல் பங்க் சிக்​னல் சந்​திப்​பிலிருந்து எல்​.பி. - எம்​.ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) சந்​திப்பு வரை சாலை முழு​வது​மாக மூடப்​படு​கிறது.

திரு​வான்​மியூரில் இருந்து திரு.​வி.க. பாலம் நோக்​கிச் செல்​லும் அனைத்து பேருந்​துகள் மற்​றும் கனரக வாக​னங்​கள், எல்​.பி.-எம்​.ஜி. சாலை சந்​திப்​பிலிருந்து எம்​.ஜி. சாலை, சாஸ்​திரி நகர் முதல் பிர​தான சாலை, முதல் அவென்யூ வழி​யாக எல்​.பி. சாலையை அடை​யு​மாறு மாற்​றுப்​பாதை​யில் இயக்​கப்​படும்.

பெசன்ட் நகரிலிருந்து 7-வது அவென்யூ வழி​யாக வரும் வாக​னங்​கள், மகாத்மா காந்தி சாலை, சாஸ்​திரி நகர் முதல் பிர​தான சாலை, முதல் அவென்யூ வழி​யாக எல்​.பி. சாலையை அடைய வேண்​டும்.

எல்​.பி. சாலை​யி​ல் இருந்து திரு​வான்​மியூர் நோக்கி வரும் வாக​னங்​கள், சாஸ்​திரி நகர் முதல் அவென்​யூ, 11-வது குறுக்​குச் சாலை, 8-வது குறுக்​குச் சாலை, 10-வது குறுக்​குச் சாலை வழி​யாக எம்​.ஜி. சாலையை சென்​றடைய​லாம்.

மேலும் சாஸ்​திரி நகர் முதல் பிர​தான சாலை திரு.​வி.க. பாலம் நோக்கி ஒரு​வழிப் பாதை​யாக​வும், 11-வது குறுக்​குச் சாலை திரு​வான்​மியூர் நோக்கி ஒரு​வழிப் பாதை​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளது.

திரு​வான்​மியூரில் இருந்து திரு.​வி.க. பாலம் நோக்​கிச் செல்​லும் இலகுரக வாக​னங்​கள், எல்​.பி.-எம்​.ஜி. சாலை சந்​திப்​பில் இடதுபுறம் திரும்​பி, இந்​திரா நகர் 2-வது அவென்​யூ, முதல் பிர​தான சாலை, முதல் அவென்யூ வழி​யாக இந்​தி​யன் ஆயில் பெட்​ரோல் பங்க் சிக்​னல் சந்​திப்பை சென்​றடைய​லாம்.

இந்​திரா நகர் 2-வது அவென்யூ சாலை​யில் கனரக வாக​னங்​கள் செல்​லத் தடை வி​திக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு போக்​கு​வரத்​து போலீ​ஸார் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சிபிஎம் , தவாக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in