வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Updated on
1 min read

சென்னை: வங்​கக் கடலில் இன்று உரு​வாகும் புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி காரண​மாக திருநெல்​வேலி உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மன்​னார் வளை​குடா மற்​றும் அதனை ஒட்​டிய இலங்கை பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நில​வு​கிறது.

இதன் காரண​மாக ஒரு குறைந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் அடுத்த 24 மணி நேரத்​தில் உரு​வாகக்​கூடும். இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (மே 11) ஒருசில இடங்​களி​லும், 12 முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 15-ம் தேதி ஒருசில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று ராம​நாத​புரம், திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி மற்​றும் தூத்​துக்​குடி ஆகிய 4 மாவட்​டங்​களில் 12-ம் தேதி தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை ஆகிய டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும், 13-ம் தேதி நீல​கிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

14, 15 தேதிகளில் நீல​கிரி, கோவை, ஈரோடு, திருப்​பூர், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்​கல் மற்​றும் கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்று முதல் 14-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை குறையக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் ஊத்​தில் 17 செமீ, நாலு​முக்​கில் 16 செமீ, காக்​காச்​சி​யில் 15 செமீ, தூத்​துக்​குடி மாவட்​டம் பெருங்​குளத்​தில் 14 செமீ, திருநெல்​வேலி மாவட்​டம் மாஞ்​சோலை​யில் 13 செமீ, ராம​நாத​புரம் மாவட்​டம் தங்​கச்​சிமடத்​தில் 8 செமீ, ராமேசுவரம், கோவை வேளாண் பல்​கலைக்​கழகம், பாம்​பன், சென்னை சைதாப்​பேட்​டை​யில் தலா 7 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in