ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
Updated on: 
1 min read

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குல தெய்வமான வனப்பேச்சி அம்மன் கோயில் ஶ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ளது. இங்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தி விட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போதும், முக்கிய முடிவு எடுக்கும் முன்பும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் தனது குல தெய்வமான செண்பகத் தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக திமுகவில் இணைவதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் ஶ்ரீவில்லிபுத்தூரில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், திடீரென இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம், பெரிய பெருமாள் சந்நிதி ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார்.

அதன்பின், ஓபிஎஸ் செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ஓபிஎஸ் மகளும், மருமகனும் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் தொழிலாளர்களை புலி தாக்கியதா? - வனத்துறை விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in