மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேர்தல் முடிவுகள் 9-ம் தேதி வெளியாகும்
தாராபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. அதனை பார்வையிட்ட தேர்தல் காண்காணிப்பு அலுவலர்கள்.

தாராபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. அதனை பார்வையிட்ட தேர்தல் காண்காணிப்பு அலுவலர்கள்.

Updated on: 
2 min read

சென்னை: மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று (6-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தமி​ழ​கத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தனித்​தொகு​தி​களில் இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்​பாணையை கடந்த செப்​டம்​பர் 7-ம் தேதி தேர்​தல் ஆணை

​யம் வெளி​யிட்​டது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் செப்​டம்​பர் 9-ல் தொடங்கி 16-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத்​(அ​தி​முக), சுகந்தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர். அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா(தவெக), சுகன்​யா(​தி​முக), பானு​ம​தி (அ​தி​முக), லட்​சுமணன் (சிபிஐ), கார்த்​தி​கா(​நாதக) உட்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்றனர்.

தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் தலா 2 நாட்​கள் பிரச்​சா​ரம் செய்​தார். திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி உள்​ளிட்​டோரும், அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பிரச்​சா​ரம் செய்​தனர்.

கம்​யூனிஸ்ட் வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சி​களின் மாநில நிர்​வாகி​களும், நாம் தமி​ழர் கட்​சி​யின் வேட்​பாளர்​களுக்​காக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் செய்​தனர்.

இந்த தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக, நாதக, கம்​யூனிஸ்ட்​கள் என 5 முனை போட்டி நில​வு​கிறது. எனினும், தவெக, அதி​முக, திமுக ஆகிய 3 பிர​தான கட்​சிகளுக்கு இத்​தேர்​தலானது அரசி​யல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக இருக்​கிறது. இரு தொகு​தி​களி​லும் தேர்​தல் பிரச்​சா​ரம் அக்​டோபர் 4-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

இதையடுத்து இடைத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு இன்​று(6-ம் தேதி) நடை​பெறுகிறது. இதை​யொட்டி இரு தொகு​தி​கள் முழு​வதும் துணை ராணுவத்​தின் பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு பலத்த கண்​காணிப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

தொகு​தி​களில் உள்ள வெளி​யாட்​கள் முழு​வது​மாக அங்​கிருந்து வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர். இரு தொகு​தி​களி​லும் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடி மையங்​களில் பதற்​ற​மான​வை​களாக கண்​டறியப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் போலீ​ஸார் மற்​றும் தேர்​தல் பறக்​கும் படை​யினர் பாது​காப்பு பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவ்​விரு தொகு​தி​களி​லும் பாது​காப்பு அறை​யில் வைக்​கப்​பட்​டிருந்த மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் நேற்று வேட்​பாளர்​களின் பெயர் மற்​றும் சின்​னங்​கள் அடங்​கிய தாள்​கள் பொருத்​தப்​பட்டு சரி​பார்க்​கப்​பட்​டன. தொடர்ந்து வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் தேர்​தல் உபகரணங்​கள், வாக்​குச்​சாவடி மையங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. மது​ராந்​தகம் தொகு​தி​யில் 285 வாக்​குச்​சாவடி மையங்​கள் உள்​ளன. இதில், படாளம், மேல​வலம் உட்​பட60 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான​வை​யாக கண்​டறியப்​பட்​டுள்​ளன. தாராபுரம் தொகு​தி​யில் மொத்​த​முள்ள 320 வாக்​குச்​சாவடிகளில் 18 பதற்​ற​மான​வை​யாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. அவற்​றில் கூடு​தல் பாது​காப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இருதொகு​தி​களி​லும் தேர்​தல் நடத்தை விதி​கள் மற்​றும் பணப்​பட்​டு​வா​டாவை கண்​காணிக்க பறக்​கும் படைகள், நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்​கள் மற்​றும் வீடியோ கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளன. இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடை​பெற உள்​ளது. வாக்​குப்​ப​திவுக்கு முன்​பாக கட்​சி​களின் முகவர்​கள் முன்​னிலை​யில் மாதிரி வாக்​குப்​ப​திவு நடத்​தப்​படும். வாக்​காளர்​கள் அரசு ஆவணங்​களு​டன் வாக்​களிக்​கலாம்.

வாக்​குப்​ப​திவை முன்​னிட்டு மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​குட்​பட்ட பகு​தி​களில் இன்று பொது விடு​முறை வழங்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வாக்கு எண்​ணிக்கை வரும் 9-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யிலும்​... புதுச்​சேரி​யில் நடந்​து ​முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மங்​கலம், தட்​டாஞ்​சாவடி என 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வென்ற முதல்​வர் ரங்​க​சாமி, தட்​டாஞ்​சாவடி தொகு​தி எம்எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, அந்த தொகு​திக்​கும் இடைத்​தேர்​தல் இன்று (6-ம் தேதி) நடை​பெறுகிறது. தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யில் அரசி​யல் கட்​சிகள் சார்​பில் 6 பேரும், சுயேச்​சைகளாக 5 பேரும் மொத்​த​மாக 11 வேட்​பாளர்​கள் போட்​டியிடுகின்​றனர்​.

எந்​தெந்த ஆவணங்​களை பயன்​படுத்தி வாக்​களிக்​கலாம்? - வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பணியாளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>தாராபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. அதனை பார்வையிட்ட தேர்தல் காண்காணிப்பு அலுவலர்கள்.</p></div>
புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு: கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in