தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்த உத்தரவு: தமிழக மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி இப்போது தலைமையிடத்து கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக இருந்த எஸ்.ராஜேந்திரன் இப்போது மதுரை காவல் ஆணையராகவும், அங்கு காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர் இப்போது வட சென்னை கூடுதல் ஆணையராகவும், அப்பதவியில் இருந்த பிரவேஷ் குமார் இப்போது கடலோர பாதுகாப்பு குழும ஐஜி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி-யாக உள்ள எஸ்.ராஜேஸ்வரி இப்போது திருப்பூர் காவல் ஆணையராகவும், சேலம் காவல் ஆணையராக இருந்த அனில் குமார் கிரி இப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாகவும், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த ஜி.கார்த்திகேயன் இப்போது சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி-யாகவும், அப்பதவியில் இருந்த பி.சாமுண்டீஸ்வரி இப்போது சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி ஏ.ஜி.பாபு இப்போது டிஜிபி அலுவலகத்தில் செயல்படும் தலைமையிடத்து ஐஜியாகவும், சென்னை காவல் தலைமையிடத்து ஐஜி ஜோஷி நிர்மல் குமார் இப்போது சேலம் காவல் ஆணையராகவும், பணியமைப்பு பிரிவு ஐஜி பி.சி தேன்மொழி இப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ராதிகா இப்போது நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், அங்கிருந்த சி.மகேஸ்வரி இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை (செல்-1) ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த துரைகுமார் இப்போது பணியமைப்பு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தவெக எம்எல்ஏ பல்லவியின் குழந்தைக்கு ‘தமிழ் வெற்றிகொண்டான்’ என பெயர் சூட்டிய முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in