இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்குக்கு முதல் பரிசாக தங்க பதக்கம்

இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்குக்கு முதல் பரிசாக தங்க பதக்கம்
Updated on: 
1 min read

சென்னை: டெல்​லி​யில் நடை​பெற்று வரும் இந்​திய பன்​னாட்டு வர்த்​தகப் பொருட்காட்சியில் தமிழக அரங்​குக்கு முதல் பரிசாக தங்க பதக்​கம் வழங்​கப்​பட்​டது.

இந்​திய பன்​னாட்டு வர்த்​தக மேம்​பாட்டு அமைப்​பின் (ஐடி​பிஓ) சார்​பில், டெல்லி பாரத் மண்​டபத்​தில் நவம்​பர் 13-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 15 நாட்​களுக்கு 45-வது இந்​திய பன்​னாட்டு வர்த்​தக பொருட்​காட்சி நடை​பெற்று வரு​கிறது.

இதில், நாட்​டின் பல்​வேறு மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​கள் மற்​றும் வெளி​நாடுகளின் சார்​பில் அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

‘வளர்ச்சி மற்​றும் பாரம்​பரியம்’ என்​ப​தைக் கருப்​பொருளாகக் கொண்ட இக்​கண்​காட்​சி​யில், தமிழக அரசின் செய்தி மக்​கள் தொடர்பு துறை​ சார்​பில் தமிழக அரங்கு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் அரசின் மகத்​தான திட்​டங்​கள் மற்​றும் சாதனைகளை விளக்​கும் புகைப்​படங்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டிருந்​தன.

மேலும், சுற்​றுலா, வேளாண்மை மற்​றும் உழவர் நலம், தொழில், குறு, சிறு, நடுத்​தர தொழில் நிறு​வனங்​கள் துறைகளின் சார்​பிலும் சிறப்பு அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

கண்​காட்​சி​யின் கருப்​பொருளை மிக சிறப்​பாகக் காட்​சிப்​படுத்​தி​யதற்​காக, மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் பிரி​வில் தமிழக அரங்​குக்கு முதல் பரிசாக தங்க பதக்​கம் அறி​விக்​கப்​பட்​டது.

இதற்​கான விருதை, இந்​திய பன்​னாட்டு வர்த்​தக மேம்​பாட்டு அமைப்​பின் தலை​வர் ஜாவேத் அஷ்​ரப் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் நீரஜ் கர்​வால் ஆகியோரிடம் இருந்து தமிழக செய்தி மக்​கள் தொடர்​புத் துறை இயக்​குநர் அ.அருண் தம்​புராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்குக்கு முதல் பரிசாக தங்க பதக்கம்
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும்: முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கடிதம்

X