பரந்தூர் விமான நிலைய திட்டம் சாத்தியமற்றதா? - அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டம் சாத்தியமற்றதா? - அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: பரந்​தூர் 2-வது விமான நிலைய திட்​டம் சாத்​தி​யமற்​றது என்ற அமைச்​சர் நிர்​மல் குமாரின் கருத்​துக்​கு, தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, பாஜக மாநில தலைமை செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: முந்​தைய திமுக அரசு தான், சென்​னை​யின் 2-வது விமான நிலை​யத்​துக்கு பரந்​தூரை தேர்வு செய்​ததோடு, ஆயிரக்​கணக்​கான ஏக்​கர் நிலங்​களை விமான நிலைய திட்​டத்​துக்​காக கையகப்​படுத்தி முன்​னெடுத்​தது.

தமிழக அரசு தான் இந்​திய விமான நிலைய ஆணை​யத்​திடம் பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்க பொருத்​த​மான இடம் என்​ப​தற்​கான விரி​வான முன்​சாத்​திய ஆய்​வறிக்​கையை சமர்ப்​பித்​தது.

இதில், 4040 மீ x 45 மீ அளவி​லான இரட்டை ஓடு​தளங்​களுக்கு சென்னை விமான நிலைய போக்​கு​வரத்​துக்கு ஏற்ற வகை​யில், அதன் திசையமைவு உட்பட அனைத்​தை​யும் உறுதி செய்து ஆவணங்​களை வழங்​கியது.

மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகம் 2024 ஜூலை​யில், இடத்​துக்​கான அனு​ம​தி​யை​யும், 2025-ல் கொள்கை அளவி​லான திட்ட அனு​ம​தி​யை​யும் வழங்​கியது.

இந்​திய விமான நிலைய ஆணை​யம், சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம், பாது​காப்பு அமைச்​சகம் உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பு​களின் பல கட்ட ஆய்​வு​களுக்கு பிறகு இது நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், இப்​போது அமைச்​சர் நிர்​மல் குமார் அந்த ஓடு​தளத்தை சாத்​தி​யமற்​றது என்று திடீரென சொல்​வது தொழில்​நுட்​பப் பிரச்​சினை​யால் அல்ல.

தங்​கள் தலை​வரின் சுய விருப்​பத்​தால், மலி​வான ஓட்டு வங்கி அரசி​ய​லால் தான். இது மாநில வளர்ச்​சியை விட தவெக-​வின் வளர்ச்சி தான் முக்​கி​யம் என்ற அவர்​களின் மாநில வளர்ச்​சிக்​கெ​தி​ரான நோக்​கத்தை வெளிப்​படுத்​துகிறது.

இது சென்​னை​யின் விமானப் போக்​கு​வரத்து நெரிசலை பல ஆண்​டு​களுக்கு நீடிக்க வைக்​கும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் சாத்தியமற்றதா? - அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு
சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்ய சதி திட்டம்: 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in