சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்ய சதி திட்டம்: 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்ய சதி திட்டம்: 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது
Updated on
1 min read

பொன்​னேரி: சென்​னை, மணலி புதுநகர், அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம் அரு​கே​யுள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசிக்​கும் லாரன்ஸ் என்​பவர் வீட்​டின் அரு​கில் சிலருடன் கூட்​ட​மாக கூடி யாரோ ஒரு​வரை கொலை செய்ய திட்​ட​மிடு​வ​தாக​வும் அவர்​களிடம் பயங்​கர​மான ஆயுதங்​கள் இருப்​ப​தாக​வும் நேற்று முன் தினம் அதி​காலை மணலி புதுநகர் போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, மணலிபுதுநகர் போலீ​ஸார், சம்​பந்​தப்​பட்ட பகு​திக்கு விரைந்​தனர். அப்​போது, அங்​கிருந்த 8 பேர், போலீ​ஸாரை கண்​டதும் தப்​பித்து ஓட முயன்​றனர்.

அவர்​களை போலீ​ஸார் பிடித்​தனர், அப்​போது, 8 பேர் கும்​பல், போலீ​ஸாரை தள்​ளி​விட்டு அருகே வந்​தால் கொலை செய்​து​விடு​வோம் என மிரட்​டி​விட்டு தப்​பிச்​செல்ல முயன்​றனர். தொடர்ந்​து, போலீ​ஸார் 8 பேர் கும்​பலை பிடித்து விசா​ரணை நடத்​தினர்.

அவர்​கள், சென்​னை, மாத்​தூர் பகு​தியை சேர்ந்த லாரன்ஸ் (23), ரத்​திஷ் (24), சந்​தோஷ் (21), கிருஷ்ணபிர​சாத் (22), சசிகு​மார் (20), சஞ்​சய் (23), விக்​னேஷ் (24), 17 வயது சிறு​வன் என்​பதும், அவர்​கள் முன்​விரோதம் காரண​மாக மாத்​தூர் பகு​தியை சேர்ந்த முகேஷ் என்ற சரித்​திர பதிவேடு குற்​ற​வாளியை கொலை செய்ய, ஆயுதங்​களு​டன் சதிதிட்​டம் தீட்​டியதும் தெரியவந்​தது.

இதுகுறித்து, வழக்​குப் பதிவு செய்த மணலிபுதுநகர் போலீ​ஸார், 17 வயது சிறு​வன், லாரன்ஸ் உள்​ளிட்ட 8 பேரை கைது செய்​து, அவர்​களிடம் இருந்​து, சுமார் ஒன்​றரை அடி நீள​முள்ள இரும்பு கைப்​பிடி​யுடன் கூடிய 6 அரி​வாள்​கள், இரு கத்​தி​கள், ஒரு மோட்​டார் சைக்​கிள்​ ஆகிய​வற்​றை பறிமுதல் செய்தனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்ய சதி திட்டம்: 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது
ஆந்திராவில் இருந்து காரில் குட்கா கடத்திய வியாபாரி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in