அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதி

அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதி
Updated on
1 min read

சென்னை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி சார்பில், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர். அதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவும் பங்கேற்று பேசியபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அரங்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஹெச்.ராஜாவுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதி
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘சந்திரயான்-4’ திட்டம்: இஸ்ரோ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in