இறுதி வேட்​பாளர்​கள் பட்டியல் வெளி​யீடு: சட்டப்பேரவை தேர்​தல் களத்தில் 4500 வேட்பாளர்​கள்

இறுதி வேட்​பாளர்​கள் பட்டியல் வெளி​யீடு: சட்டப்பேரவை தேர்​தல் களத்தில் 4500 வேட்பாளர்​கள்
Updated on
2 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் இறுதி வேட்​பாளர்களின் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் உள்ள 234 தொகு​தி​களில் சுமார் 4,500 வேட்​பாளர்​கள் போட்டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. மார்ச் 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி நிறைவடைந்​தது. 234 தொகு​தி​களி​லும் மொத்​தம் 7,599 வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. 7-ம் தேதி வேட்​புமனுக்​கள் பரிசீலனை நடை​பெற்​றது. இதில் 5,139 மனுக்​கள் ஏற்​கப்​பட்​டன. முறை​யாக பூர்த்தி செய்​யப்​ப​டாத 2 460 மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. மனுக்​களை திரும்​பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்​கப்பட்​டது. இதில் 500-க்​கும் மேற்பட்ட வேட்​புமனுக்​கள் திரும்​பப் பெறப்​பட்​டன.

இதையடுத்​து, நேற்று மாலை இறுதி வேட்​பாளர்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. 234 தொகு​தி​களி​லும் 4,500-க்​கும் மேற்​பட்ட வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது. இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்​பாளர்​களுக்​கான சின்​னங்​கள் ஒதுக்​கப்​பட்​டன.

அந்​தந்த தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் உறு​தி​யாகி​யுள்ள நிலை​யில், அத்​தொகு​தி​களுக்​கான தபால் வாக்​குச்​சீட்​டு​களை அச்​சிடும் பணி​கள் இன்று தொடங்​கு​கின்​றன. அடுத்த சில தினங்​களில் தேர்​தல் அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்கு அடுத்​தகட்ட பயிற்சி வழங்​கப்பட உள்​ளது. அப்​போது அவர்​களிடம் தபால் வாக்​குச் சீட்​டு​கள் வழங்​கப்பட உள்​ளன.

அதனைத் தொடர்ந்​து, வேட்​பாளர்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​ற​வாறு, தேவை​யான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் கணக்​கிடப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் ஒவ்​வொன்​றி​லும் 16 வேட்​பாளர்​களின் பெயர் மற்​றும் சின்​னங்​கள் இடம்​பெறும். வேட்​பாளர்​களின் எண்​ணிக்கை அதற்கு மேல் இருந்​தால் கூடு​தலாக ஒரு வாக்​குப்​ப​திவு இயந்​திரம் இணைக்​கப்​படும். அதி​கபட்​ச​மாக 4 அலகு​களை சேர்க்க முடி​யும். அவற்​றில் 63 வேட்​பாளர்​கள் மற்​றும் ஒரு நோட்டா பொத்​தான் இடம்​பெறும்.

ஏற்​கெனவே, தொகுதி வாரி​யாக வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பிரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் வேட்​பாளர்​களின் பெயர்​கள் மற்​றும் சின்​னங்​களை பொருத்​தும் பணி​கள் ஓரிரு தினங்​களில் தொடங்க உள்​ளன. அதற்​கான பெயர், சின்னங்​களை அச்​சிடும் பணி​களும் இன்று தொடங்​கு​கின்​றன.

இந்த தேர்​தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்​றாம் பாலினத்​தினர் என மொத்​தம் 5,73,43,291 பேர் வாக்​களிக்க உள்​ளனர். இவர்​களுக்கு வீடு வீடாக சென்று வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூல​மாக வாக்​காளர் சீட்டு விநி​யோகம் செய்​யும் பணி இன்று தொடங்​கு​கிறது. 17-ம் தேதிக்​குள் இப்​பணி​களை முடிக்க வேண்​டும் என மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்கு தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இத்​தேர்​தலில் சுமார் 75 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் தயார்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதில் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான மற்​றும் மிக​வும் பதற்​ற​மானவை​யாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 23 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட துணை ராணுவப்​படை​யினர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யான நிலை​யில், தமிழகம் முழு​வதும் நியமிக்​கப்​பட்​டுள்ள 151 செல​வின பார்​வை​யாளர்​களும், வேட்​பாளர்​களின் பிரச்​சார செல​வினங்​களை வீடியோ​வில் பதிவு செய்​து, செல​வினத்தை மதிப்​பிட்டு வரு​கின்​றனர். அவற்​றை, வேட்​பாளர்​களின் செலவு கணக்​கில் சேர்க்​கும் பணி​களை இன்​று​முதல் தீவிரப்​படுத்த இருப்​ப​தாக தகவல் வெளி​யாகியுள்ளது.

இறுதி வேட்​பாளர்​கள் பட்டியல் வெளி​யீடு: சட்டப்பேரவை தேர்​தல் களத்தில் 4500 வேட்பாளர்​கள்
புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in