கூடலூரில் பிடிபட்ட புலி வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு

கூடலூரில் பிடிபட்ட புலி வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு
Updated on
1 min read

வண்டலூர்: கூடலூர் வனப்பிரிவில் 28 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆண் புலி, சில்வர் கிளவுட் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கூண்டில் சிக்கியது.

வனத்துறையினர் நடத்திய ஆய்வில், கூடலூர் பகுதியில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர் புடைய புலி இது என்பது உறுதி செய்யப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கும்கி யானைகள், கேமரா பொறிகள், ஆளில்லா விமானங்கள், கூண்டுகள் உதவியுடன் புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பிடிபட்ட புலி மருத்துவப் பரிசோதனைக்காக முதலில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாப் பாக ஒப்படைக்கப்பட்டது. பூங்கா நிர்வாகத்தின் செய்திக் குறிப்பின்படி, சுமார் 10 வயது ஆண் புலி தற்போது சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் விலங்கு பராமரிப்புக் குழுவினர் அதன் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

கூடலூரில் பிடிபட்ட புலி வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு
சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்து உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in