எரிசக்தி துறையில் இந்தியா வேகமாக வளர்கிறது: திருவனந்தபுரம் என்ஐஐஎஸ்டி இயக்குநர் தகவல்

சேலம் பெரி​யார் பல்​கலை.​யில் நேற்று நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில் மாணவிக்கு பட்​டம் வழங்​கிய ஆளுநர் ஆர்​.என்​.ர​வி. உடன், திரு​வனந்​த​புரம் என்​ஐஐஎஸ்டி இயக்​குநர் அனந்​த​ராமகிருஷ்ணன் உள்​ளிட்​டோர்.படம்: எஸ்​.குரு பிர​சாத்

சேலம் பெரி​யார் பல்​கலை.​யில் நேற்று நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில் மாணவிக்கு பட்​டம் வழங்​கிய ஆளுநர் ஆர்​.என்​.ர​வி. உடன், திரு​வனந்​த​புரம் என்​ஐஐஎஸ்டி இயக்​குநர் அனந்​த​ராமகிருஷ்ணன் உள்​ளிட்​டோர்.படம்: எஸ்​.குரு பிர​சாத்

Updated on
1 min read

சேலம்: எரிசக்தி துறை​யில் இந்​தியா வேக​மாக வளர்ந்து வரு​கிறது என்று திரு​வனந்​த​புரம் என்​ஐஐஎஸ்டி இயக்​குநர் அனந்​த​ராமகிருஷ்ணன் கூறி​னார். சேலம் பெரி​யார் பல்​கலை.​யில் நேற்று நடை​பெற்ற 24-வது பட்​டமளிப்பு விழாவுக்​கு, பல்​கலை. வேந்​தரும், ஆளுநரு​மான ஆர்​.என்​.ரவி தலைமை வகித்​தார்.

துணைவேந்​தர் நிர்​வாகக் குழு அமைப்​பாளர் சுந்​தர​வல்லி வரவேற்​றார். முதன்மை விருந்​தின​ராகப் பங்​கேற்ற திரு​வனந்​த​புரம் என்​ஐஐ எஸ்டி இயக்​குநர் அனந்​த​ராமகிருஷ்ணன் பேசி​ய​தாவது: இந்​தியா தற்​போது உலகின் 4-வது பொருளா​தார நாடாகத் திகழ்​கிறது.

விரை​வில் 3-வது இடத்​தைப் பிடிக்​கும். ஆண்​டு​தோறும் 332 மில்​லியன் டன் உணவு உற்​பத்தி செய்​து, உணவு தானிய உற்​பத்​தி​யில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்​தியா விளங்​கு​கிறது.

அதே​போல, எரிசக்தி துறை​யிலும் அதிக வளர்ச்சி கண்​டுள்​ளது. 2025-ம் ஆண்டு புள்​ளி​விவரப்​படி 476 ஜிகா​வாட் மின் திறனை இந்​தியா எட்​டி​யுள்​ளது. புதுப்​பிக்க எரிசக்தி திறனில் உலகில் 4-வது இடத்​தில் உள்​ளது. மக்​கள் தொகை பெருக்​கத்​தால் உணவு, நீர், எரிசக்தி தேவை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது.

2024-25-ல் தனி நபர் எரிசக்தி நுகர்வு 1,538-1541 கிலோ​வாட்​டாக உள்​ளது. 2030-ல் இது 2,000 கிலோ​வாட்டை எட்​டும். எரிசக்தி துறை​யில் இந்​தியா வேக​மாக முன்​னேறி வரு​கிறது. திரு​வனந்​த​புரம் சிஎஸ்​ஐஆர் (என்​ஐஐஎஸ்​டி) நிறு​வனம், நகராட்சி கழி​வுநீரில் இருந்து பச்சை ஹைட்​ரஜனை உற்​பத்தி செய்​வதற்​கான உயி​ரி-மின்​வே​தி​யியல் தொழில்​நுட்​பத்தை உரு​வாக்​கி​யுள்​ளது.

நாட்​டின் எதிர்​காலம் இளைஞர்​களின் கையில் உள்​ளது. கடின உழைப்​பு, நேரம் தவறாமை, நேர்​மை, ஒழுக்​கம், தொழில்​முறை வளர்ச்​சிக்​கான சக்​தி​வாய்ந்த கட்​டமைப்பை உரு​வாக்​குதல் ஆகியவை வெற்​றிகர​மான வாழ்க்​கைக்கு வழி வகுக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்​து, ஆளுநர் ஆர்​.என்​.ரவி 358 பேருக்கு முனை​வர் பட்​டச் சான்​றிதழ்​களும், பெரி​யார் பல்​கலைக்​கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்​லூரி​களில் சிறப்​பிடம் பிடித்த 110 மாணவ, மாணவி​களுக்கு தங்​கப் பதக்​கங்​களை​யும் வழங்​கி​னார்.

மொத்​தம் 49,429 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டன. விழா​வில், பல்​கலை. பதி​வாளர் ராஜ், ஆட்​சிக்​குழு, ஆட்​சிப் பேரவை உறுப்​பினர்​கள், பேராசிரியர்​கள் கலந்து கொண்​டனர். தமிழக உயர்​கல்​வித்துறை அமைச்​சரும், இணை வேந்​தரு​மான கோவி.செழியன் விழா​வில் பங்​கேற்​க​வில்​லை.

<div class="paragraphs"><p>சேலம் பெரி​யார் பல்​கலை.​யில் நேற்று நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில் மாணவிக்கு பட்​டம் வழங்​கிய ஆளுநர் ஆர்​.என்​.ர​வி. உடன், திரு​வனந்​த​புரம் என்​ஐஐஎஸ்டி இயக்​குநர் அனந்​த​ராமகிருஷ்ணன் உள்​ளிட்​டோர்.படம்: எஸ்​.குரு பிர​சாத்</p></div>
நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்: உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in