தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: திருமாவளவன் கருத்து

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

சென்னை: முக்​கிய​மான அரசி​யல் முடிவு​களை விசிக, இடது​சா​ரி​கள் இணைந்தே எடுப்​போம், அந்த வகை​யில் தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பது குறித்து இது​வரை முடி​வெடுக்​க​வில்லை என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

மாமேதை காரல் மார்க்​ஸ்​ 208-வது பிறந்த நாளை​யொட்​டி, எழும்​பூர் கன்​னிமரா பொது நூலக வளாகத்​தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், விசிக தலை​வர் திரு​மாவளவன் ஆகியோர் நேற்று மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்​தினர்.

அதைத்​தொடர்ந்து மூவரும் அண்ணா அறி​வாயல​யத்​துக்​குச் சென்​று, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்து தேர்​தல் முடிவு​கள் குறித்து கலந்​தாலோ​சித்​தனர்.

பின்​னர் வணிக காஸ் சிலிண்​டர் விலை உயர்வை கண்​டித்து விசிக மற்​றும் இடது​சா​ரிக் கட்​சிகள் சார்​பில் தமிழகம் முழு​வதும் நாளை (மே 7) நடை​பெறவுள்ள கண்டன ஆர்ப்​பாட்​டம் குறித்​து, தி.நகரில் உள்ள மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி அலு​வல​கத்​தில் மூவரும் ஆலோ​சனை நடத்​தினர்.

இந்​நிகழ்​வு​களுக்கு மத்​தி​யில் தவெக​வுக்கு பெரும்​பான்மை இல்​லாத​தால் விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஆதரவு அளிக்​குமா என்ற கேள்விக்கு செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

திரு​மாவளவன்: விசிக மற்​றும் இடது​சா​ரி​கள் நீண்ட கால​மாக மதச்​சார்​பற்ற அரசி​யல் கலத்​தில் இணைந்தே பயணித்து வரு​கிறோம்.

எதிர்​காலத்​தி​லும் முக்​கிய​மான அரசி​யல் முடிவு​களை ஒருங்​கிணைந்தே எடுப்​போம். தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பது குறித்து இது​வரை முடி​வெடுக்​க​வில்​லை. தமிழகத்​தில் நில​வும் சமூகநீதி அரசி​யல் சூழலை பாது​காக்க வேண்​டும் என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கிறோம்.

தேர்​தலில் தவெகவை எங்​கள் எதிர்ப்​பின் இலக்​காக நாங்​கள் முன்​னிறுத்​த​வில்​லை. அதி​முக முதுகில் ஏறி பாஜக ஆட்சி அமைக்க நினைத்​தது. அதைத் தடுக்க நாங்​கள் முன்​னெடுத்த முயற்சி வெற்​றி​பெற்​றிருக்​கிறது.

பெ.சண்​முகம்: மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யின் பிர​தான​மான நோக்​கம் அதி​முக - பாஜக கூட்​ட​ணியை தோற்​கடிப்​பது. அதில் நாங்​கள் வெற்​றி​பெற்​றிருக்​கிறோம்.

மு.வீர​பாண்​டியன்: இடது​சா​ரி​கள் அனை​வருக்​குமே, பாஜக​தான் முதல் எதிரி. அரசி​யல் கட்​சிகள் தோற்​கலாம். வெற்​றி​பெறலாம். ஜனநாயகம் தோற்​று​விடக் கூடாது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: திருமாவளவன் கருத்து
கொளத்தூர் தொகுதியில் திறந்த வாகனத்தில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in