தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜன.31 முதல் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜன.31 முதல் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்​டங்​களில் வரும் 31 முதல் பிப். 2-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 31 முதல் பிப். 2-ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்​டங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 30 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 22 டிகிரி செல்​சி​யஸ் அளவில் இருக்​கும்.

தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜன.31 முதல் மழைக்கு வாய்ப்பு
தவெக வேட்பாளர் பட்டியல் பிப்.2-ல் வெளியீடு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in