

சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
வேலூர், திருத்தணியில் தலா 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி, தொண்டி, மதுரை விமான நிலையத்தில் தலா 102 டிகிரி, நாகப்பட்டினம், மதுரை மாநகரில் தலா 101 டிகிரி, காரைக்கால், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, ஈரோடு, கடலூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இருந்து லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா, ஆந்திரா வழியாக மத்திய வங்கக்கடல் பகுதி வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (மே 21) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.