திடீர் தொழில்நுட்பக் கோளாறால் கோட்டையில் ஒரு மணி நேரம் மின்தடை: அமைச்சர்களின் அறைகளில் பணிகள் தடைபட்டன

திடீர் தொழில்நுட்பக் கோளாறால் கோட்டையில் ஒரு மணி நேரம் மின்தடை: அமைச்சர்களின் அறைகளில் பணிகள் தடைபட்டன
Updated on: 
1 min read

சென்னை: தலை​மைச் செயல​கத்​தில் அமைச்​சர்​களின் அறை​களி​லேயே நேற்று சுமார் ஒரு மணி நேரம் மின்​தடை ஏற்​பட்​ட​தால், பணி​கள் தடைபட்​டன.

தமிழகத்​தில் நகர்ப்​புறங்​கள், கிராமப்​புறங்​களில் பரவலாக மின்​தடை பிரச்​சினை உள்​ளது. குறிப்​பாக, இரவு நேரங்​களில் நீண்ட நேரம் மின்​தடை ஏற்​படு​வ​தால் குழந்​தைகள், முதி​ய​வர்​கள் உள்​ளிட்​டோர் பெரும் சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன், என்​. ஆனந்த், வெங்​கடரமணன், ரஞ்​சித் குமார் உள்​ளிட்​டோரின் அறை​களில் நேற்று காலை 10.30 மணி அளவில் திடீர் மின்​தடை ஏற்​பட்​டது. இதனால், அமைச்​சர் அலு​வல​கங்​களில் பணி​கள் தடைபட்​டன.

இதுகுறித்து தமிழக மின்​வாரி​யம் வெளி​யிட்ட விளக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தலை​மைச் செயல​கத்​தின் பிர​தான கட்​டிடத்​தின் முதல் தளத்​தில் சில பகு​தி​களில் மட்​டும் மின் விநி​யோகத்​தில் தற்​காலிகத் தடை ஏற்​பட்​டது. மற்ற அனைத்து தளங்​களி​லும் மின் விநி​யோகம் தடை​யின்றி இயல்​பாக இருந்​தது. தலை​மைச் செயலக வளாகத்​துக்​குள் உள்ள மின் விநி​யோகக் கட்​டமைப்​பு​கள் பொதுப்​பணித் துறை​யின் பராமரிப்​பில் உள்​ளன.

முதல் தளத்​துக்கு மின்​சா​ரம் வழங்​கும் 4 மின் சுவிட்ச்​களில், ஒரு சுவிட்ச்​சின் பி-பேஸ் (B-Phase) மின் விநி​யோகத்​தில் மட்​டும் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து பொதுப்​பணித் துறை அலு​வலர்​கள் உடனடி​யாக ஆய்வு மேற்​கொண்​டு, பழுதை சரிசெய்​து, மின் விநி​யோகத்தை மீண்டும் சீரமைத்​தனர். தொடர்ந்து காலை 11.25 மணி அளவில் முதல் தளத்​தில் இயல்​பான மின் விநி​யோகம் முழு​மை​யாக மீட்​டெடுக்​கப்​பட்​டது. அதன் பின்​னர், தலை​மைச் செயல​கத்​தின் அனைத்து தளங்​களி​லும் மின் விநி​யோகம் சீராக உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டுள்​ளது.

திடீர் தொழில்நுட்பக் கோளாறால் கோட்டையில் ஒரு மணி நேரம் மின்தடை: அமைச்சர்களின் அறைகளில் பணிகள் தடைபட்டன
ஜெம் வீரமணி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் 3 மணி நேரம் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in