இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்​பாடு​களைக் களைவது, உயர்​கல்விக்கு மீண்​டும் ஊக்க ஊதிய உயர்வு என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு பள்​ளிக்​கல்வி அமைச்​சரிடம் ஆசிரியர் கூட்​டமைப்பு நேரில் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

தமிழ்​நாடு தொடக்​கக்​கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு​வின் (டிட்​டோஜாக்) மாநில உயர்​மட்​டக்​குழு உறுப்​பினர்​கள், தலை​மைச் செயல​கத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகனை நேற்று சந்​தித்து கோரிக்கை மனுவை அளித்​தனர்.

அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்​பாடு​களைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆசிரியர்​களுக்கு முன்பு வழங்​கப்​பட்ட உயர்​கல்விக்​கான ஊக்க ஊதிய உயர்வை மீண்​டும் வழங்க வேண்​டும். தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி, அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​காக நடத்​தப்​பட்ட சிறப்பு ஆசிரியர் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி மதிப்​பெண்​ணைக் குறைக்க வேண்​டும், பணி அனுபவம் மற்​றும் உயர்​கல்வி தகு​திக்​கேற்ப வெயிட்​டேஜ் மதிப்​பெண்​கள் வழங்க வேண்​டும்.

பாடத்​திட்​டத்​துக்கு அப்​பால் கேட்​கப்​பட்ட வினாக்​களுக்கு முழு மதிப்​பெண் தர வேண்​டும். ஆசிரியர்​களைப் பெரிதும் பாதிக்​கக்​கூடிய அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்​டும்.

அரசு பள்​ளி​களில் உள்ள ஆசிரியர் காலி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும். மாற்​றுத் திற​னாளி​கள், தீவிர நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் 55 வயதுக்கு மேற்​பட்ட ஆசிரியர்​களுக்கு மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புப் பணி​யில் இருந்து விலக்கு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மனுவை பெற்​றுக்​கொண்ட அமைச்​சர் ராஜ்மோகன், கோரிக்​கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறுதி அளித்​தார்​ என தமிழக ஆரம்​பப்​பள்​ளி ஆசிரியர்​ சங்​க பொதுச்​செய​லா​ளர்​ டி.ஆர்​. ஜான்​ வெஸ்​லி தெரி​வித்​​தார்​.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து தரவுகள் ஒருங்கிணைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in