சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகில் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகில் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் வழங்​கக்​கோரி தலை​மைச் செயல​கம் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட முயன்ற டாஸ்மாக் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​திய, இஎஸ்ஐ உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஏஐடி​யுசி தமிழ்​நாடு டாஸ்மாக் பணி​யாளர்​கள் சங்​கம் சார்​பில் தலை​மைச்செயல​கம் நோக்கி முற்​றுகைப் போராட்​டம், எழும்​பூரில் உள்ளதமிழ்​நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்​குநர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது.

சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் நா.பெரிய​சாமி தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட டாஸ்மாக் பணி​யாளர்​கள் தங்​களது வாழ்​வா​தார கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி கோஷங்​களை எழுப்​பிய​வாறு, லாங்க்ஸ் கார்​டன் சாலை​யி​லிருந்து முற்​றுகைக்​கான பேரணி​யைத் தொடங்​கினர்.

அப்​போது போலீ​ஸார் அவர்​களை தடுத்தி நிறுத்தி கலைந்து செல்​லு​மாறு அறி​வுறுத்​திய நிலை​யில், தொடர்ந்து முன்​னேறிய​தால் போராட்​டக்​காரர்​களை காவல் துறை​யினர் கைது செய்து அரு​கில் உள்ள மண்​டபங்​களுக்கு கொண்டு சென்​றனர். போராட்​டத்​தில் ஏஐடி​யுசிதேசிய செய​லா​ளர் டி.எம்​.மூர்த்​தி, மாநில செய​லா​ளர்டி.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

முன்​ன​தாகஇந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் போராட்​டத்தை தொடங்கி வைத்து செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி வரக்​கூடிய ஆயிரக்​கணக்​கான டாஸ்மாக் பணி​யாளர்​கள் தொடர்ச்​சி​யாக மாநாடு​கள், பேரணி, ஆர்ப்​பாட்​டம் என ஓராண்​டுக்​கும் மேலாக பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் கோரி போராடி வரு​கின்​றனர்.

அரசுக்கு எதிரானது அல்ல: இந்த போராட்​டம் அரசுக்கு எதி​ரானது அல்ல. இந்த போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​கள் அனை​வரும் அரசுக்கு ஆதர​வாக இருப்​பவர்​கள். இதே அரசு​தான் மீண்​டும் வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்​றி​பெற வேண்​டும் என்று உணர்​வுப்​பூர்​வ​மாக விரும்​பக்​கூடிய​வர்​கள்.

இவ்​விவ​காரத்​தில் முதல்​வர் தலை​யிட்​டு, அவர்​களின் நியாய​மான கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும். மத்​திய பாஜக அரசின் கடந்த கால பட்​ஜெட்​டு​களில் மக்​கள் என்​னென்ன ஏமாற்​றங்​களை சந்​தித்​தார்​களோ, அதே​தான் 2026-27 பட்​ஜெட்​டிலும் நடந்​திருக்​கிறது. பிரதமர் மோடி​யின் கண்​களுக்கு தெரிவதெல்​லாம் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் மட்​டும்​தான். சாதாரண தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், உழைக்​கும் மக்​களைப் பற்றி எந்த அக்​கறை​யும் பாஜக அரசுக்குஇல்​லை.

எனவே வரும் பிப்​.12-ம் தேதி தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் இணைந்து மத்​திய அரசுக்கு எதி​ராக நாடு தழு​விய பொது வேலைநிறுத்​தப் போ​ராட்​டத்தை நடத்​தவுள்​ளனர். இந்த போ​ராட்​டம்​ வெற்​றிகர​மாக நடை​பெறும்​. இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகில் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | <em>படம்: எல்.சீனிவாசன்</em> |</p></div>
“அமெரிக்காவின் வரி குறைப்பு பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி” - ஜி.கே.வாசன் பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in