காலி பாட்டில் திரும்பப் பெறுவதை கைவிட கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஜன.8-ல் கோட்டைக்கு பேரணி

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

‘காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை பணியாளர்களிடம் திணிப்பதை கைவிடக் கோரி ஜன.8-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும்’ என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சமபவங்களிலிருந்து ஊழியா்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில் ஏராளமான பணிகள் பணியாளர்கள் மீது திணிக்கப்படுகின்றன. இத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கடை ஊழியர்களைக் கொண்டுதான் அமல்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களை மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கையாளும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களைக் கூட நிர்வாகம் வழங்கவில்லை. எனவே, வேலைப்பளு திணிப்பு, ஊழியர்களின் சுகாதாரம் பாதிப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு மாற்றுத் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஜன.8-ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும். அதைத்தொடர்ந்து, டாஸ்மாக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்ட தேதியை அறிவிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மசோதாவை காங். எதிர்ப்பது ஏன்? - அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in