

அனுராக் தாக்குர்
ஜலந்தர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் விபி-ஜி ராம்-ஜி என மாற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்
கேற்ற பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கூறியதாவது: கடந்த 2004-ல் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என பெயர் மாற்றப்பட்டது. 2009-ல்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினருக்கு 2009-ல்தான் மகாத்மா காந்தி பெயர் ஞாபகம் வந்ததா? இத்திட்டத்தில் ‘ராம்’ என்ற பெயர் வருவதால், இதை காங்கிரஸ் எதிர்க்கிறது. ராமர் கோயில், ராமர் பாலம், சனாதன தர்மா போன்றவற்றையெல்லாம் காங்கிரஸ் விமர்சிக்கிறது’’ என்று தெரிவித்தார்.