டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு
Updated on
1 min read

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு அரசு நிர்​ண​யித்த அதி​கபட்ச சில்​லறை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக புகார்​கள் இருந்து வரு​கின்​றன.

இந்​தக் கூடு​தல் வசூல் முறையை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்​பில் பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. இதனிடையே டாஸ்​மாக் கடைகளின் பராமரிப்பு செலவு உள்​ளிட்​ட​வற்றை கடை பணி​யாளர்​களே ஏற்​றுக்​கொள்ள வேண்​டும் என நிர்​வாகம் தரப்​பில் கூறப்​பட்​ட​தால் தான் கூடு​தல் தொகை வாங்​கு​வ​தாக பணி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் நடை​பெற்ற மது​விலக்​குத்​துறை மானிய கோரிக்​கை​யின் போது, டாஸ்​மாக் பணி​யாளர்​களுக்கு ஊதிய உயர்​வு, கடைகளின் பராமரிப்பு செலவு உள்​ளிட்​ட​வற்றை அரசே ஏற்​கும் என அறி​வித்​து, இனி கூடு​தல் விலைக்கு மது விற்​பனை செய்​வோர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், ஊதிய உயர்வு உள்​ளிட்ட அறி​விப்​பு​களுக்கு பிறகும் கூடு​தல் தொகை வசூலிக்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. மேலும், டாஸ்​மாக் கடைகளில் கூடு​தல் விலை வசூலிப்​பது உள்​ளிட்ட புகார்​களை தெரிவிக்க புதிய புகார் சேவை மைய​மும் தொடங்​கப்​பட்​டது.

இந்த மையத்​துக்கு வந்த புகார்​களின் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், கடந்த புதன் மற்​றும் வியாழக்​கிழமை​களில் 217 பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்.

இந்த நடவடிக்​கைக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, குன்​றத்​தூர், திரு​முடி​வாக்​கம் உள்​ளிட்ட சென்னை புறநகர் பகு​தி​களி​லும், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் உள்ள டாஸ்​மாக் கடைகளை நேற்​றும், நேற்று முன்​தின​மும் அடைத்​து, மாவட்ட மேலா​ளர் அலு​வல​கங்​கள் முன் போராட்​டத்​தில் ஈடுப்​பட்​டனர்.

காலி பாட்​டில்​கள் திரும்ப பெறும் திட்​டம் அமல்​படுத்த ஆகும் செல​வு​கள், உடை​யும் பாட்​டில்​களுக்கு இழப்​பீடு, கடை வாடகை உள்​ளிட்​ட​வற்றை வழங்​கு​வது குறித்து நிர்​வாகம் தரப்​பில் எது​வும் கூற​வில்​லை.

மேலும் பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​வதற்கு தாசில்​தார் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து தான் நடவடிக்கை எடுக்க முடி​யும், புகார்​களின் அடிப்​படை​யில் எவ்​வித விசா​ரணை​யுமின்றி சஸ்​பெண்ட் செய்​துள்​ளனர். இந்த நடவடிக்கை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என பணி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

இது குறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘மூடப்​பட்ட கடைகளை தற்​காலிக மாற்று பணி​யாளர்​களை கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு சில கடைகள் நேற்​றைய தினமே திறக்​கப்​பட்​டது. கடைகளை மூடி போராட்​டத்​தில் ஈடு​பட்ட பணி​யாளர்​களின் விவரங்​கள் சேகரிக்​கப்​பட்டு வரு​கிறது, அவர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு
“சட்​டப் ​பேர​வை​யிலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது” - பட விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் சுவாரஸ்யம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in